
பெண்கள் வகிக்காத பணிகளே பதவிகளே கிடையாது.
இந்தியாவின் நாடாளுமன்ற அவையை நடத்தும் பெண்ணாக..
பொறியியலில்... மென்பொருள் ஆக்கத்தில்... மருத்துவத்தில்... வான்வெளிஆய்வில்...
தாயாக, மனைவியாக, தோழியாக,மகளாக... நம்மை பிறப்பெடுத்து ஆளாக்குக்கிற தாய்மை...
உலகத்தில் சரிபாதியாக உள்ள பெண்சமூதாயத்தினர் இந்தியாவில் இந்து கோவில்களில் அர்சகராக முடியாது...
எழுதப்படாத சட்டம், ஆகமகங்கள், மனு நீதியின் நீட்சி, பார்ப்பனியத்தின் தீ நாக்குகள் இப்படிதான் பேச வைக்கும்.
காஞ்சி காமாட்சி,
மதுரை மீனாட்சி,
காசி விசாலாட்சி என ஆட்சி செய்யும் பெண் தெய்வங்களுக்கு பூசை செய்ய பெண்கள் அர்ச்சகராக முடியாது. அதை மதங்கள் தடுக்கும். குறிப்பாக இந்துமதம் தடுக்கும்.. அனுமதிக்காது...
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியிருப்பதாவது:-
”திருக்கோவில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க போவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியிருக்கிறார். இது இந்துக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, இந்துக்களின் நடைமுறைகளை, மரபுகளை குலைத்து ஆலயங்களின் புனிதத்தை கெடுக்கும்.”
பெண்களுக்கு அனைத்துத்துறையிலும் ஒதுக்கீடு கேட்கலாம். சட்டம் அனுமதிக்கும். அர்ச்சகர் என்றால் உச்ச நீதிமன்றமே வாயை மூடும். ஏனென்றால் இது மதம் சார்ந்த விசயம். அதுவும் இந்து மதம் சார்ந்த்து. இதைப்பற்றி பேசவே அனுமதிக்காது.
எனென்றால் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கூறுவது போல ஒரே செய்திதான் புனிதம் கெட்டுவிடும். தீட்டுப்பட்டு விடும்.
இந்திய சமுக அமைப்பு சாதிய சமூகம். இச்சமூகம் இந்துமத்த்தின் அச்சாணியில் சுழலுகிறது. உயர்ந்த அமைப்பில் பார்ப்பான். கீழே தாழ்த்தப்பட்ட தலித். இதுதான் சாரம் ஆனால் இச்சாதி அமைப்பிலும் பார்ப்பனாகட்டும், தாழ்த்தப்பட்டவனாகட்டும் இச்சாதிகளின் கடை நிலையில் பெண்கள்.
எல்லாச் சாதிகளிலும் அடிமையை பெண்களை வைத்து இருக்கிறது.
அவள் மென்பொருள் பொறியியலாராக இருந்தாலும், கிராமத்தில் சுள்ளி பொறுக்கிக்கொண்டு அடுப்படியில் வெந்து கொண்டு இருக்கும் பெண்ணாக இருந்தாலும் அவள் அடிமையே.
தீட்டு. புனிதம் எல்லாம் இச்சாதிய சமூகம், பார்ப்பனியம் கட்டிய அமைப்பு. இதைத்தான் பெரியார் ‘ பெண்களை கருப்பைகளை அறுத்தெரியச் சொன்னார்.”
புனிதத்தை மீறச் சொன்னார். கடவுளை, சாதியை, ஆகமதத்தை, பண்டிகைகளை என்ற அனைத்து கட்டுமானங்களையும் மீறச்சொன்னார்.
பெண் உடலியலில் சார்ந்த நிகழ்வுகளான ‘ மாத விலக்கை “ தீட்டாக பாவிக்கிறது. புனிதம் கெடும் என்று சொல்கிறது.
பெண் படுக்கைக்கும் சமையல் அறைக்கும், பணிவிடைக்கு மட்டும் ஏற்றவள் என்கிறது மதங்கள். இந்து மதம் உள்ளீட்ட அனைத்து மதங்களும் இக்கருத்தையே போதிக்கிறது.
காஞ்சி காமாட்சியமனுக்கு ஒரு பார்ப்பன பெண்ணைத்தான் அர்சகராக அனுமதிக்குமா இந்துமதம் ? சங்கராச்சாரி அனுமதிப்பாரா ?
ஆட்சாரம் கெட்டுவிடும்... இது தான் பதிலாக இருக்கும்...
விடைதான் என்னா ?
பெரியார் வழீயே பதில்.
மதத்தை, சாதியை, இவற்றை எல்லாம் உயர்த்திப்பிடிக்கும் கடவுளர்களை மீறவேண்டும்.
3 comments:
//பெரியார் வழியே பதில்.
மதத்தை, சாதியை, இவற்றை எல்லாம் உயர்த்திப்பிடிக்கும் கடவுளர்களை மீறவேண்டும்.//
மதத்தை, சாதியை, இவற்றை எல்லாம் உயர்த்திப்பிடிக்கும் கடவுளர்களை ஒழிக்கவேண்டும் என்பது மிக சரியானது
நன்றி
கடவுளும் மதமும்,பெண்களை என்றுமே இழிவு படுத்திதான் வந்துள்ளன..
அனைத்து மனித அடக்குமுறைகள், அடிமைத்தனங்கள் நம்மால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட சுமைகளாக மதங்கள் திணிக்கிறது. அடிமைத்தனங்களை நியாயப்படுத்தும் மதங்களை மீறவேண்டும். இந்திய சமூகத்தில் சாதியமே பெறும் தடை கற்களாக உள்ளன. சாதியை களைய மத்தத்தின் வேர்களை கடவுளின் வேர்களை பிடுங்க வேண்டும்.
கருத்துரைத்த தமிழ் ஓவியா, தமிழ் வெங்கட்டுக்கு நன்றிகள்.
Post a Comment