அமெரிக்க நலன்... அம்பானியின் நலன்... டாடாவின் நலன்

இந்திய உறவு அமெரிக்க உறவு மேம்பட ஹில்லாரி கிளிண்டன் இந்தியா வந்துள்ளார்..இந்திய பொருளாதாரம் மேம்பட.. மேம்படுத்த...

மும்பையில் இந்திய பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, ரத்தன் டாட்டா ஆகியோரை சந்தித்து இந்திய மேம்பாடு குறித்து பேசியுள்ளார்.

இந்தியா ஏழை நாடு என்பது அது அந்தகாலம்?

இது முதலாளிகளின் நாடு...

ஏழ்மை,பசி,வறுமை, வேலையில்லா திண்டாட்டம் எல்லம் ஒரு பிரச்சனையே இல்லை இந்திய பொருளாதாரத்தை சுமந்து கொண்டு இருக்கும் இவர்களுக்கு...

பாராளுமன்ரம் இவர்களின் ஜிப்பா பாக்கெட்டில்.

முதலாளி நல்லா இருந்தால் தான் நாம் இருக்க முடியும். நிதி அமைச்சரின் பட்ஜெட் கூட இவர்களின் ஆலோசனைப்படிதான் தாக்கல் செய்யவார்.

அம்பானி குடும்பத்தில் சிக்கல் என்றால் மன்மோகன் சிங்கில் இருந்து சிதம்பரம் வரை சென்று பஞ்சாயத்து செய்வார்கள். ஏனென்றால் முதலாளி நன்றாக இருக்க வேண்டும்.

சரி அது இருக்கட்டும்..

ரிலயன்ஸ் அம்பானியின் ஒரே இந்தியா கனவு அனைவரும் செல்லுமிடமெல்லாம் பேச வேண்டும். பேச பேச ஏக இந்தியா வலுவாகும்...

அடுத்தது டாடாவின் கனவு. உயர்ந்த சிந்தனை. கார் கனவு நனவாகிறது. 1 இலட்ச ரூபாய்க்கு நானோ கார். ஏக இந்தியாவை சுற்றலாம்.

அமெரிக்காவின் கவலை இரண்டு மட்டுமே ஒன்று தீவிரவாதம் மற்றொன்று வறுமை இதைத்தான் ஹில்லாரி கிளிண்டன் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த உயர்ந்த நோக்கம் பற்றி அம்பானியிடம் டாடாவிடம் விவாதித்தார் கிளிண்டன்.

மாதம் 15 ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு அரசு ஊழியர் வருமானவரி கட்டுவார். அவரும் வருமானவரி கட்டி லட்சாதிபதிகள், கோட்டீஸ்வர்ர்கள் லிஸ்டில் சேருவார். சேரவேண்டும். இது அமெரிக்க நாயகத் தத்துவம். இன்னொன்றையும் பார்க்க வேண்டும்.

சிறப்பு பொருளாதார மண்டலம் ( Special Economic Zone ) நோக்கி தேசம் பீடு நடை போட்டுக் கொண்டு இருக்கிறது. இதில் அம்பானியின் ரிலையன்ஸ்,டாடா, மஹிந்தரா,ஹிண்துஸ்தான்,சகாரா,யுனிடெக்,அடானில்,டிஎல்லெப் ஆகிய பெரு முதலாளித்துவ நிறுவன்ங்கள் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இணைய இந்திய பொருளாதாரத்தை உயர்த்தப் போகிறார்கள்.

1 இலட்சத்துக்கு கார் தரப்போகும் இவர்களுக்கு வரியே கிடையாது.

பல ஆயிரம் கோடி இலாபம் ஈட்டப் போகும் இவர்களுக்கு 100% வரி விலக்கு ஐந்தாண்டுகளுக்கு அனுபவிப்பார்கள்.

இந்திய பொருளாதார அமைப்பு

சாதாரன கடனை வாங்கிய இந்திய மகனின் வீட்டை ஏலத்தில் விடும்.

மாதம் 15 ஆயிரம் ஊதியம் வாங்கும் அரசு ஊழியர் பான் கார்டு வாங்கி வரிக் கட்டி இந்தியன் என நிறுபிக்க வேண்டும்.

ஆனால் பல ஆயிரம் கோடி இலாபம் ஈட்டும் அம்பானி டாடாவுக்கு வரிவிலக்கு அளிக்கும்.

இது தான் அமெரிக்க நாயகம்.

இந்திய நாயகமும் இதுதான்.

எல்லேரும் சமம்

சட்ட்த்தின் முன்னால்...

என்று கூறி ஓஓஓஓஓஓஓ போடுங்கள்.

1 comment:

Anonymous said...

Good post.
Thank u!

Post a Comment