பயத்தில் இன அழிப்பு செய்யும் பாசிஸ்டுகள்.


இலங்கை அரசுக்கு தற்காப்புக்காகவே இராணுவ உதவி செய்ததாக இந்திய பாதுபாப்பு இணை அமைச்சர் பல்லம் ராஜீ கூறி இருக்கிறார்.

அதுவும் புலிகளிடமிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவே இந்தியாவிடம் கொலைக்கார ஆயுதங்களை பெற்றதாம்!?

தற்காப்பு யுத்தத்தில் 1 இலட்சத்திற்கு மேற்பட்டோர் சுவடே இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டனர்.

பயங்கர வாத்த்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.

புலிகள் அமைப்பு வேரோடு பிடுங்கி எறியப்பட்டுவிட்டது.

இலங்கையை விட இந்திய அரசு மகிழ்சியில் உள்ளது.

வேலிகளுக்கு பின்னால் நாளாந்தம் மனித படுகொலைகள் நடப்பது,

வெள்ளை வேனின் கொலை நிகழ்வுகள் திகில் திருப்பங்கள் கொண்ட திரைப்பட காட்சிகள் போல ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

அம்மா ! சோனியாவின் அமைதியையே பாகிமூனும் கடைப்பிடிக்கிறார்.

பிராபாகரன் இறந்த செய்தியை மகிழ்வோடு வெளியிட்ட இந்திய தொலைக்காட்சி/செய்தி ஊடகங்கள் இப்போது பேசா நோம்பை கடைப்பிடிக்கிறது.

திருமாவளவன் நடத்திய “எழும் தமிழ் ஈழம் “ மாநாட்டு விளம்பர பதாகையில் ஈழத்தை மட்டும் நீக்கியது தமிழக அரசு. பக்சேவைத்த தீயில் எண்ணெய் ஊற்றுகிறது தமிழக அரசு.

நல்லது.

புலிகளை அழித்தாயிற்று !.

பிராபாகரனை கொன்றொழித்தாகிவிட்டது !

பிறகு ஏன் அச்சம் ?

இராஜபக்சே,சோனியா, பாகிமூன் போன்ற் கும்பல்களுக்குத்தெரியும்.

பிராபகரன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ் ஈழம் எழும்.

சிறைக் கொட்டடியில் இருப்பது ஈழமக்கள் மட்டுமல்ல,

நாளை இந்திய/இந்து தேசியம் தமிழகத்தையும் இப்படித்தான் நிற்க வைக்கப்போகிறது

பாசிஸ்டுகள் தினமும் செய்யும் இன அழிப்பு நடவடிக்கைகள் எழுச்சியை வீழ்ச்சியுறச்செய்யாது.

No comments:

Post a Comment