நட்சத்திர இயக்குநர்களை கதிகலங்க வைக்கும் “பசங்க” இயக்குநர்கள்.


பல 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில்லை...

சூப்பர்ஸ்டார்ஸ் வேல்யு இல்லாத நாயகர்கள்....

பெரிய பெரிய செட்டிங்கில்லை...

காதை அதிரவைக்கும் டிஜிட்டல் மிக்சிங். மும்ம்பையில் இசை சேர்ப்பு...

லண்டனில் பின்னணி இசை எல்லாம் இல்லை...

வெளிநாடுகளில் 4 பாடல்கள், பட இறுதி காட்சிக்கு லொக்கேசன் தேட ஒரு மாத டூர் இல்லை...

நாயக நாயகிகளின் குத்துப் பாட்டு இல்லை..

நாக்க முக்கவை பெரிது படுத்திய ஊடகங்களின் ஒத்துழைப்பு இல்லை.

அனிமேசனில் குளோனிங் எபெக்ட் இல்லை...

சிவாஜி, தசவாதாரம் ,போக்கிரி, பில்லா, அயன் போல நட்சத்திர முத்திரையுமில்லை...

வெளிநாடுகளில் டிஸ்கசன்....

ஸ்டார் ஓட்டல்களில் பெரிய ரூம் போட்டு கதை விவாதங்கள் இல்லை....

இரண்டு மூன்று ஆண்டுகள் கதை தேடி /10 ஆங்கில படங்களை பார்த்து / பின் சுட்டு /பிரமிக்கும் திரைக்கதை இல்லை...

வெள்ளைத்தோல்...

தொப்புள் குளோசப்...

பிரண்ட் / பேக் பொசிசனை டைட் குளோசப் காட்டும் டெக்னிக்குகள் ?! இல்லை..

டைட் ஜீன்சில் நீலப்படங்களின் பொசிசன்களை மிஞ்சும் நடன காட்சிகள் இல்லை... டான்ஸ் மாஸ்டர்களின் இனர்ஜிகள் இல்லை...

ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டு, 100 அப்பர் ஆங்கிலில் சூட் செய்யும் சாகசம் இல்லை...

இந்த தொழில் நுட்பங்கள் நம்பாத படங்களும் வெற்றியை ஈட்டியுள்ளது.

  • பசங்க
  • வெண்ணிலா கபடிக்குழு
  • வெயில்
  • பருத்திவீரன்
  • சுப்பிரமணியபுரம்
  • பூ
  • கல்லூரி போன்றவை (படங்கள் விட்டுருந்தால் பொருத்தருள்க)

மேலே பார்த்த படங்கள் புனித சினிமா இலக்கணங்களை மீறியை தாம்.

இப்படங்கள் பல கோடி ரூபாய் பட்ஜெட்டுகளை சாப்பிட்ட படங்களை இழுத்து, கோடம்பாக்கத்திலேயே அடித்து துவைத்து இருக்கிறது

மேதாவித்தனத்தை எல்லாம் விட்டுவிட்டு பசங்கத்தனமாக எடுக்கும் படங்கள் வெற்றியை ஈட்டி இருக்கிறது. நமது சமூக வாழ் மக்களின் மறைக்கப்பட்ட/ மதிக்கப்படாத வாழ்வின் சுவடுகளை ஆவண மாகும் போது மக்கள் கொடுக்கும் மறியாதையைக் கூட நட்சத்திர இயக்குநர்கள் அளிப்பதில்லை...

மாடு சாணி போடுவதிலிருந்து, எங்களூர் வாண்டுகள் பெய்யும் ஒண்ணுக்கு அடிக்கும் காட்சிகளும் அழகியலே என்று சின்ன பசங்க இயக்குநர்கள் எடுக்கும் படங்கள் எல்லாம் ஸ்டார் இயக்குநர்களின் பார்வையிலே தீண்டாத்தகாதவைகளே.

இப்படங்களின் நாயகிகள் தாராளமான ஆடைத்தோற்றத்தில்...

மார்பு பிதுங்கி வெளியேறத் துடிக்கும் ஆடை அணியாதவர்கள்..

சாணி பிசைதல், வரட்டி தட்டுதல் , சுள்ளி பொறுக்குவார்கள் படித்துறையில் துணி துவைப்பது,புகைகையை கக்கும் அடுப்பில் ஊதி ஊதி களி கிண்டுவார்கள்.

மொத்தத்தில் மும்பையில் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளைத்தோல் அயிட்டங்களாக இந்நாயகிகள் இருப்பதில்லை.

இப்பொது வந்து வெற்றி கொடி நாட்டிருக்கும் “பசங்கபடமே சாட்சி. எல்லா சினிமாத்தனங்களை மீறியுள்ளது. எங்களூர் மண்ணின் வண்ணத்தையே பார்க்கமுடிகிறது. இப்படத்தில் வரும் அன்பு,ஜீவா மாணவர்களே நாயகர்கள்.

நட்சத்திர இயக்குநர்கள் பட்த்தில் பேசும் குழந்தைகள் போல, ஊரைவிட்டு ஓடிப்போவது, அம்மா அப்பா டைவர்ஸ்சைப் பற்றி எல்லாம் இவர்களுக்கு பேசத்தெரியாது. ஏனென்றால் ஸ்கூல் பஸ்ஸில் சென்று டான்பாஸ்கோ கான்வெண்டில் படித்து வந்த களைப்பில் ஆர்லிக்ஸ்சும் ஸ்னேக்ஸ்சும் சாப்பிடும் குடுப்பத்தில் இருந்து வந்தவர்களில்லை பசங்க நாயகர்கள்.

மரத்தடியில் காக்கா ஆய் போகும், வெய்யில் அடிக்கும் அப்போது நகர்ந்து உட்காரும் அனுபவம் கொடுக்கும் ஊராட்சிப் பள்ளியில் படித்தவர்கள் பசங்க நாயகர்கள்.

100 பேர் மத்தியிலும் மூக்கில் மூச்சிறைக்க பேசும் பாத்திரங்களில்லை,

ஊரைவிட்டு ஓட காதலர்களுக்கு டிப்ஸ் கொடுக்கத்தெரியாது இவர்களுக்கு.

தமிழக ஸ்டார் இயக்குநர் படைக்காத பார்க்காத கதையமைப்பை உளவியல் பார்வையோடு கொடுத்துள்ளார் “பசஙகஇயக்குநர் பாண்டியராஜ்.

இப்படத்தில் ஊராட்சிப் பள்ளியில் வாணமே கூரையாக படிக்கும் மாணவர்கள் எப்படி பேசுவார்களோ அப்படி.

படத்தன் நாயகர்கள் தலை அஜித் போலவோ தளபதி விஜய் போலவோ பஞ்ச் டயலாக் பேசத்தெரியாது. ஒத்தைக்கு ஒத்தையாக சண்டை போடத்தெரியும்.

“பசஙகஇயக்குநர் பாண்டியராஜ் இப்படத்தின் வித்தை/விதையை ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு தேடி இருக்கமாட்டார்.

தசவாதார ரேஞ்சில் !? இல்லாவிட்டலும் மக்களிடம் சென்றுள்ளது, வெற்றியும் வெற்றுள்ளது.

அது போல வெண்ணிலா கபடிக்குழு நாயகர்களும் லுங்கியில்தான் படமுழுக்க பயணித்தார்கள். ஆல்ப்ஸ் மலைத்தொடரில், சுவிஸ் பனி மலைத்தொடரில் வண்ண பூக்கள் மத்தியில் டூயட் பாட முயர்ச்சிக்காத மனிதர்கள். இவர்களின் வாழ் முறை அப்படி.

கருப்பு மனிதர்கள்..

வியர்வை மக்கள்...

வறுமைக்கு பிறந்தவர்கள் படிக்க அவர்களைதேட ஸ்டார் ஓட்டல் தேவையில்லை.

கனவு தொழிற்சாலையில் இருந்து வந்து பாருங்கள். எவ்வளவு கதைகள்..இதில்..

சாகசங்கள்..

நகைச்சுவை..

காதல்.மோதல்.. எண்ணிலடங்கா...

இதைப்படிப்பவன் வெற்றி அடைகிறான்..

மற்றவன் நுட்பத்தை தேடுகிறான். கனவு உலகில் எங்களை கட்டிப்போட பல 100 கோடிகள் கொட்டுகிறான்...



10 comments:

Anonymous said...

மயாண்டி குடும்பத்தார் - படத்தை விட்டு போயிவிட்டது

james Rajendran said...

மயாண்டி குடும்பத்தார் - படத்தை விட்டு போயிவிட்டது

its also gone to theter

Enna Vanmurai !

கலையரசன் said...

அருமை! பக்காவாக சொல்லியிருக்கிறீர்கள்..

இதுபோல இடுகை இட்டுள்ளேன், வந்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...

http://kalakalkalai.blogspot.com/2009/06/blog-post_14.html

ஏகலைவன் said...

ஜேம்ஸ் ராஜேந்திரனுக்கு நன்றி.

கலையரசன் உங்கள் தளம் சினிமா விக்கிப்பீடியா

நன்றிகள்.

Anonymous said...

தமிழ்10 gadget சரிசெய்யப்பட்டு விட்டது , இப்போது முயற்சி செய்து பாருங்கள்

கோவி.கண்ணன் said...

மண்ணின் மணத்துடன் வரும் தரமான படங்கள் எப்போதும் தோற்காது, பாரதி ராஜா முத்திரை பதித்தது இப்படித்தான்.

ஏகலைவன் said...

மண்ணின் மனமே இலக்கியத்தில் கலையில் வெளிப்படும் போது மக்களிடம் சென்றடைகிறது. அது இசை, திறைப்படம் என்ற எல்லா நிலைகளிலும் வெற்றியடைகிறது.
நன்றி கண்ண்ன்

பொன் மாலை பொழுது said...

வித்யசமான வெளிப்பாடுகள் மெல்லிய satire இழையோட உண்மைகளை சொல்லியிருப்பது அழகாக உள்ளது.திரையுலகின் ஒரு முட்டாள் தனமான அணுகுமுறை ஒரு யுக்தி வெற்றியடைதால் அதையே ஆட்டுமந்தைகூட்டமாக அத்தனை பேறும் அதன் பின்னாலே ஓடுவது வழக்கம். தயாரிப்பாளர்களும் அப்படித்தான் போட்ட காசையாவது எடுக்கும் முயற்சி. எனினும் கோடையில் மாலை தென்றலாக அவ்வப்போது சில படங்கள் வந்து நம்மை அசர அடிப்பது சுகமானது. வாழ்த்துக்கள் நண்பரே.

அஞ்சான் said...

/திரையுலகின் ஒரு முட்டாள் தனமான அணுகுமுறை ஒரு யுக்தி வெற்றியடைதால் அதையே ஆட்டுமந்தைகூட்டமாக அத்தனை பேறும் அதன் பின்னாலே ஓடுவது வழக்கம். / தங்களின் அழகான உண்மையான பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

Anonymous said...

naamum apadithan valarthom athathan marupadium pakuroom.

thamilan yandru sollada

siraj

Post a Comment