



பருவ மழை காலத்தே பொய்வதில்லை...
மாதம் மும்மாரி பொழிகிறதா ? இது காமெடி டிராக்காக்கிவிட்டது.
சென்னை என்றாலேயே நெரிச்சல்- தண்ணீர் பிரச்சனைதான் கண்முன் விரிகிறது.நிலத்தடி நீரின் மட்டம் குறைந்து கொண்டே போகிறது. சென்னையின் நிலத்தடி நீரின் மட்டம் மே 2009ன் ஆய்வின் படி 3.97 மீட்டராகும். இது கடந்த ஆண்டைவிட ஒப்பீட்டளவில் 0.59 மீட்டர் குறைந்து விட்டது. இதனால் சென்னையில் நீர் கிடைக்கப் போடப்பட்ட ஆழ்த்துளை கிணறுகளீன் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறதாக சென்னை மாநகர நீர் வழங்கு மற்றும் வடிகால் வாரிய ஆய்வறிக்கை கூறுகிறது.
சென்னை அண்ணா நகரில் 1.20 மீட்டரில் இருந்து 0.09 மீட்டராக குறைந்துள்ளது. இதேபோல் வடபழனியில் 2008ல் 4.70 அளவும் இவ்வாண்டின் கணக்கீட்டின்படி 3.90 மீ அளவு நீரை நாம் இழந்துள்ளோம். பெரம்பூரில் அதிகபட்சமாக 6.20 மீட்டரில் இருந்து 5.8 மீட்டராக குறைந்துள்ளதை கவனிக்கத்தக்கது.
நீர் நில ஆய்வாளர் சௌந்தரராஜன் டிகான் கிரானிகல் (சனி 13 ஜூன் 2009 )செய்தியாளரிடம் கூறியபோது முக்கிய காரணமாக கோடைக்காலத்தில் பெய்ய வேண்டிய மழைப் பொழித்துவிட்ட்தாக கூறுகிறார். சென்னையில் கடந்த மே 2008ல் 27 மிமீ மழையூம் இவ்வாண்டின் மழையளவு கணக்கீட்டின் படி 19 மிமீ குறைந்துள்ளது. இப்போக்கு சென்னை மாநகரின் நீர் ஆதாரத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.
நிலத்தடி நீரின் முக்கியத்துவம்.
மழை நீர் மற்றும் பல வகையான நீர் அனைத்தும், பூமியின் உள்ளே கசிந்து உட் செல்கிறது.பூமியின் பரப்பு,துவாரங்களுடன் இருப்பதால் நீர் செல்ல ஏதுவாக உள்ளது. பூமி தன்னுள்ளே ஓரளவு நிலத்தடி நீரை நிரந்தரமாக கொண்டுள்ளது. இதற்கு நிலத்தடி நீர் மட்டம் (Water Table ) என்று பெயர். எப்போதெல்லாம் நாம் தண்ணீரை மிக அதிகமாக செலவழிக்க நேரிடிகிறதோ, அப்போதெல்லாம் நிலத்தடி நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இயற்கையாக நிலம் பெறுகின்ற நீரை விட நாம் பயன்படுத்தும் நிலத்தடி நீர் அதிகமாக இருப்பதனால் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகப்போய்விடும் அபாயம் உள்ளது.
சென்னையை பொருத்தவரை நகரமயமாக்களின் விளைவாக நீர்ப்பிடிப்பு இடங்களான ஏரிகள், குளம், வயல்வெளிகள் எல்லாம் காணமுடியாது. வீடுகள்,புதிய குடியிறுப்புப் பகுதிகள், தொழில் பட்டறைகள் தோன்றி இயற்கையில் நிலம் பெறும் மழை நீர் அளவு குறுக்கப்பட்டு விட்டது.
நிலத்தடி நீர் மட்ட்த்தைப் பாதிக்கும் மற்ற காரணிகள்.
- உயர்ந்து கொண்டிருக்கும் மக்கள் தொகை
- பருவ நிலை மாற்றம்
- நகரமயமாக்கல்
- காடுகள் அழிப்பு
- ஏரிகள் விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் வியாபாரமாகிவிட்டச்சூழல்
- வீடு ,தொழிற்சாலைகள் வேளாண்மை கழிவு பொருட்களின் வெளியேற்றம்
- நீர்/நில மாசடைதல்.
இது சென்னை மாநகர பிரச்சனை மட்டுமல்ல.
உலகமயமாக்களின் விளைவாக நவீன தொழில் மையங்கள் தோற்றுவிக்கப்படுவதால் விளை நிலங்கள் காணாமல் போய்விட்டன. இதன் விளைவாக அப்பகுதியில் நிலத்தின் விலை செயற்கையாக உயர்த்தப்படுகிறது. ரியல் எஸ்டேட் வியாபாரம் கொடிக்கட்டி பறக்கிறது. சென்னை. மதுரை,திருச்சி, கோவை போன்ற சாலையோர நிலங்கள் திடீர் நகர்கள் தோன்று கிறது. ஒரு சதூர அடி ரூ 300இ இருந்து 1200 வரைக்கூடப் போகிறது. அடுத்து மேலே பார்த்த காரணிகளால் மணல் கொள்ளை அரசின் ஒத்துழைப்போடு சுற்றுச்சூழலின் தோழமைச் சங்கிலி உடைக்கப்பட்டு விட்ட்து. பக்கத்து மாநிலங்களான கேரளம் கர்நார்டகம் பகுதிகளில் ஆற்று மணல் அள்ளுவது தடை செய்யப்பட்டு விட்டது.
ஆனால் இங்கு....
பொரம்போக்கு மாநிலமாகிவிட்டது?
யார் வேண்டுமானலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
ஒரு லாரி மணல் சென்னையில் ரூபாய் 15000 விற்க்கப்படுகிறது. இங்கு கொள்ளை அடிக்கப்பட்ட மணல் ஆந்திரம், கேரளத்திற்கு சென்று விற்க்கப்படுகிறது. ஆனால் மணல் அள்ளும் இட்த்தில் இதன் அரசு விலை ரூபாய் 750 வரை வசூலிக்கப்படுகிறது.
ஒரு இஞ்ச் மணல் சேருவதற்கு இயற்கை எடுத்துக் கொள்ளும் காலம் சுமார் 100 ஆண்டுகள். ஆனால் இங்கு மூன்று அடிகளுக்கு மேல் வாரக்கூடாது என்ற ஒப்பந்தத்தில் நிகழும் இக்கொள்ளையில் 15 முதல் 30 அடிகள் வரைகூட தோண்டப்பட்டு விட்ட்து.
ஒரு இஞ்ச் மனல் உருவாக 100 ஆண்டுகள் ஆகும் போது 15 அடி ஆழம் மணல் சேர எவ்வளவு ஆண்டுகள் ஆகும். இது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனை மட்டுமல்ல. தமிழகத்தின் வாழ்வாதாரப்பிரச்சனை விலை பேசப்பட்டு ஏலத்தில் பறக்கிறது.
ஜெயலலித்தா தொடங்கிய மணல் கொள்ளையை இன்று திமுக அரசு இக்கொள்ளையில் கொடிக்கட்டிப்பறக்கிறது. இவர்கள் பேசும் தமிழ்ர் நலன், நதிகளை பாலைவனங்களாக்கி விட்டார்கள்.
உயிரோடு இருக்கும் நதிகளை மணல் குவாரிகள் என்று குறிப்பிடுகின்றன நமது அரசானைகள்.
நதிகளை கொன்று விட்டு
தமிழகத்தை எப்படி முன்னுக்கு கொண்டு வரப்போகிறீர்கள் ?
நாளை சந்ததிகளுக்கு நாம் பாலை நிலத்தை பட்டா எழுதப்போகிறோமோ?
3 comments:
பூமியின் பரப்பு துவாரங்களுடன் இருந்தது. ஆனால் இப்போது வெறும் கல் மரங்கள் முளைத்த காடுகளால் நிரம்பி வழிவதாலும், வீதியெங்கும் தார் ரோடுகளாலும் - துவாரங்கள் அடைக்கப்பட்டு வருகின்றன. மழை நீர் உள்ளே போகாமல் - சாக்கடையுடன் கலந்துவிடுகிறது. விரைவில் பெரும் விளைவுகளைச் சந்திக்க இருக்கிறோம். நகரமயமாக்கலே இதற்குக் காரணம்.
//மழை நீர் மற்றும் பல வகையான நீர் அனைத்தும், பூமியின் உள்ளே கசிந்து உட் செல்கிறது.பூமியின் பரப்பு,துவாரங்களுடன் இருப்பதால் நீர் செல்ல ஏதுவாக உள்ளது.
உண்மைதான். நீர் உள்ளே கசியும் வழிமுறையே இங்கு பேசப்பட்டு இருக்கிறது. நகரமயமாதலும் ஒரு காரணியே.
தமிழர்ஸ் பட்டையை காணவில்லை இணைத்தவுடன் சொல்லுங்கள் நண்பா.
உங்களது பிளாக்கும் இணைத்தவர் பட்டியலில் சேர்க்கப்படும்
Post a Comment