ஈழம்- ஈடு செய்தாக வேண்டிய இழப்பே...




ஈழப்போர் முடிவுக்கு வந்துள்ளதாக சிங்கள அரசு அறிவித்துள்ளது. பல இலட்சத்தமிழர்கள் அடிப்படை வசதிகளின்றி முகாம் என்ற பெயரில் சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றும் உலகத்தின் பார்வையில் படாமலேயே முகாம்களில் பல ஆயிரம் உயிர்கள் பிரிந்து சென்று கொண்டுதான் இருக்கிறது. சீனாவின் வீட்டோ அதிகாரத்தில் ஐநா அவையில் தோற்க்கடிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பின்புறத்தில் அனைத்து உதவிகளையும் செய்து கொண்டே ஈழப்படு கொலைக்கு உலக நாடுகளில் ஆதரவு திரட்டுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து ஜப்பான் போன்ற நாடுகளின் கோரிக்கைகளை காதிலே வாங்குவதே இல்லை சிங்கள அரசு.

“புலிகளின் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்ட்து.பிரபாகரன் கொல்லப்பட்டார் என்ற செய்திகள் உலகத்தமிழரிடையே பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.புலம் பெயர்ந்த தமிழர்களின் வீரமிக்க எழுச்சியால் உலகின் பார்வைக்கு இனப்படுகொலை பரவலாக எடுத்துச்செல்லப்பட்டுவருகிறது.

பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பதே விவாதப் பொருளாகிவிட்டது. இதைத்தான் சிங்கள அரசு எதிர்ப்பார்த்த்து. அது நடந்து கொண்டு இருக்கிறது. ஊடகங்கள், இணயச் செய்திகள் என்று எல்லா நிலையிலுமே பிராபாகரனின் இறப்பையே சுற்றிச் சுற்றி வருகிறது.

ஈழப்புலிகளிக்கு இது பெரும் பின்னடைவே. அதுவும் வலுவான கட்டுக்கோப்பான அமைப்பை வழிநடத்தும் தலைவர் கொல்லப்பட்டார் என்பது அதிர்ச்சிக்குள்ளான செய்தியே. இன்று வரை இக்கேள்விக்கு விடைக்கிடைக்கவில்லை. புலிகள் அமைப்பு இதுப்பற்றி தெளிவான கருத்தை வெளியிடவில்லை. ஒரு இராணுவ அமைப்புக்கு இதுப்பற்றி கருத்தை வெளியிடுவது சிக்கல்கள் மிகுந்த்தே. ஆனால் தெளிவுபடுத்துவது அவர்கள் கடமை. இப்போது இதனால் எழுந்துள்ள எழுச்சி வீரியம் பெறும்.

தமிழின அழிப்பு..

புலிகளின் அமைப்பு முடக்கம்

ஈடு செய்ய முடியாத இழப்பல்ல.

ஈடு செய்து ஆகவேண்டிய இழப்பு.

உலகில் வெற்றிடம் ஏதுமில்லை. அவ்விடத்தை காற்று நிறப்பிவிடும். இது அறிவியல். அது போல இப்போது உள்ள வெறுமை நிரந்தரம் அல்ல.

வரலாறு தலைவர்களை உருவாக்குகிறது.

ஆனால் தலைவர்கள் வரலாற்றை உறுவாக்குவதில்லை. வரலாற்றில் தனிநபரின் பாத்திரத்தை நாம் மறுக்க முடியாது.

ஈழப்போராட்டம் புலிகளின் அமைப்பை முன்மொழிந்த்து. அதற்கு தலைமை பாத்திரத்தை பிரபாகரனுக்கு வழங்கியது.

இன்று நிலையே வேறு.

பேரரசுகள் ஈழத்தமிழினத்தை நசுக்கிவிட்டன. வாழ்வாதார உறிமையே கேள்விக்குறியாக போய்விட்டது.

இவ்விழப்பு ஈடு செய்தாக வேண்டும்.

வரலாறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு பாடம் புகட்டும். மக்களே வெல்வார்கள். மக்கள் அமைப்பை முன் மொழிவார்கள். இதற்கு புலிகள் வழி மொழிவார்கள்.

No comments:

Post a Comment