
தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும்…
புரட்சி வெடிக்கும்…
அனைவரும் தீக்குளிப்போம்…
என்ற முழக்கங்கள் திரைப்பட வசனங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும்.
இரத்த ஆறு ஓடியது என்னவோ ஈழத்தில் தான்.
உணர்ச்சிவயப்பட்ட மேடைப்பேச்சு கானல் நீரே!.
ஓட்டுச்சீட்டு அரசியலில் முகிழ்த்துப்போன திமுக,அதிமுக கூட்டணிக்கட்சிகள் ஈழப்பிரச்சனையை உணர்வு பூர்வமாக கொண்டுச்செல்லவில்லை.
திமுக காங்கிரஸ் கூட்டணிகளின் துரோகத்திற்கு மாற்றாக ஈழ ஆதரவாளர்கள் ! அதிமுகவை முன்னிலைப்படுத்தினார்கள். முதலாளித்துவம் மற்றும் பார்ப்பனியத்தின் கலவையே அதிமுகவின் தலைவரான ஜெயகலித்தா ஆவார்.
தேர்தல் முடிந்தது.. அவரின் முழக்கங்கள் இப்போது கேட்பதில்லை. இதுதான் அவரின் தோற்றம்… முகம்…
போலியான அவரின் முழக்கத்தை மக்கள் புறக்கணித்தார்கள்.
பணநாயகம் வென்றது…
வாக்களிக்கும் கருவில் கோளாறு… சதி… என்பது எல்லாம் தோல்வியை மறைக்க தேடும் காரணங்களாக இருக்கலாம்.
ஈழம் என்பது புலிகளின் முழக்கம் மட்டுமல்ல, தமிழர்களின் வாழ்வாதார உரிமை என்பதை தமிழக அரசியல் கட்சிகள் மக்களிடம் கொண்டு செல்லவில்லை. தேர்தல் முழக்கமாக முன்னிலைப்படுத்தப்பட்ட முழக்கத்தை மக்கள் நம்பவில்லை..ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ்நாட்டுக்கு உண்மை முகம் தமிழ்தான்.
நமது தேசியம் தமிழ்த் தேசியம் தான்.
ஆனால்…
அவனுக்கு பல பெயர்கள்
இந்தியன்..
திராவிடன்…
என்ற போலியான முகங்களை ஆளும் வர்கங்கள், அரசியல் கட்சிகள் தமிழனுக்கு போர்த்தியுள்ளன.
திராவிடன் என்ற தோற்றமே/கருத்தியலே போலியானது.
தமிழகத்தில் எழுந்த துடிப்பு, வேதனைக் குரல் கேரளத்திலோ,கர்நாடகத்திலோ அல்லது ஆந்திரத்திலோ பிரதிபலிக்கவே இல்லை. அவர்கள் சுய முகத்தோடு இருக்கிறார்கள். அவர்கள் திராவிடன் என்ற சொல்லாக்கத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை.
அடுத்து இந்தியன்… இம்முகம் தான் நம்மை மிதிக்கிறது.நம் இரத்த உறவுகளை கொல்ல திட்டம் வகுத்தது. து இந்திய தேசியமோ அல்லது பாஜக சொல்லும் இந்து தேசியமோ தமிழ்த்தேசியத்தை எழச்செய்யாது.
இப்போது இந்திய தேசியம் அதை செய்கிறது…
ஒருவேளை இந்து தேசியம் வந்திருந்தால் இதையேதான் செய்திருக்கும்..
தெற்காசியாவில் பேட்டையாளாக போலிஸ்காரனாக யார்வருவது என்ற போட்டியில் சீனா இப்போது முன்னிலையில் ஓடிக்கொண்டு இருக்கிறகிறது. ஈழத்தை நசுக்கியாகிவிட்டது என்ற பெருமிதத்தில் இருக்கும் இந்தியாவுக்கு ஆப்பு வைத்துள்ளது சீனா.
என்று இந்தியா இலங்கை இறையான்மையின் புனிதத்தைப்பற்றி பேசியதோ அப்போது இந்திய நாட்டின் இறையான்மை காற்றில் பறந்துவிட்டது. சீனாவின் வல்லாதிக்க இராணுவ தலையீடு எப்போதும் தமிழகத்தின் தலையில் வைத்த கொள்ளியே.
ஒரு பீகாரிய இளைஞன் மும்பையில் போலிஸ் மோதலில் கொல்லப்பட்டான் என்ற ஒரு காரணத்திற்காகவே லல்லு,பஸ்வான், நித்திஷ்குமார் போன்றோர் அரசியல் தலைவர்கள் பகைமைகளை தள்ளிவைத்துவிட்டு ஒன்று சேர்ந்தார்கள்.
ஆனால் தமிழக அரசியல் கட்சியில் இப்போக்கு நிகழ்ந்ததா?
மக்களை அரசியல் படுத்தாமல் இங்கு எதும் நிகழாது.
அவ்வப்போது நிகழும் தன்னியல்பான எழுச்சிக்கு எந்த அரசியல் கட்சி தலைமையேற்க தயாராகவுள்ளது?.
வைகோ,இராமதாஸ்,திருமா,கம்யு.பாண்டியன் போன்றோர் தேர்தலை முன்வைத்தே அரசியல் நடத்துகிறார்கள்.
குறைந்த பட்ச கோரிக்கைக்காக, செயல் திட்டத்திற்காகக் கூட இவர்களால் ஒன்று சேரமுடியாதபோது கடல் கடந்து நடைபெறும் தமிழின அழிப்பை எப்படி தடுத்து நிறுத்துவார்கள்.
தமிழ்த்தேசிய அடையாளத்தோடு நாம் எழும்போது போலி முகங்கள் சிதைந்துவிடும். இந்திய தேசியமே நம்மை வீழ்த்த நசுக்க எற்படுத்தப்பட்ட சிறைக்கூடமே.
மக்களை அரசியல் படுத்துவதே ஒரேவழி.
இதற்காக ஒன்றுபடுவதே தமிழ்த்தேசிய முகத்தோடு எழுவதே ஒரேவழி.
(ஓவியம்: புகழ். தமிழ் உயிர் -ஓவியத்தொகுப்பில் இருந்து)
No comments:
Post a Comment