நானும் நீயும்


(பெண்ணடிமைப் பற்றி எவ்வளவோ பேசிவிட்டாகிவிட்டது.. இலக்கியங்கள் பேசிவிட்டன. இக் கவிதையையின் யாதார்த்தை அழகியலை பாருங்கள். முடிந்தால் கருத்துரைக்கவும். வேறெப்படி பெண்ணடிமையை இலக்கிய‌த்தில் கூறமுடியும்.)

நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்
நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்
அடக்கமாக எனக்குப் பின்னால்
நின்று கொண்டிருப்பாய் நீ

உன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லி
உன்னை மிரட்டுவேன் நான்
என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும்
அமைதியாய் இருப்பாய் நீ

நீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழிய
சொல்லிக் கொள்வதில்லை நான்
நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்து
பறைசாற்றியாக வேண்டும் நீ

எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.

ஜெயபாஸ்கரன் 

3 comments:

இவன் சிவன் said...

Superb!!!!Awesome!!!!!

தினேஷ் said...

அருமை ...

/எனக்குப் பிறகு என் நினைவுகளோடு
வாழவைக்கிறார்கள் உன்னை
உனக்குப் பிறகு உன் தங்கையோடு
வாழவைக்கிறார்கள் என்னை.//

ரொம்ப பிடித்திருக்கு இது ....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு அண்ணாச்சி

Post a Comment