கவர்ச்சி மட்டுமே கொண்ட செம்மொழி மாநாட்டு முடிவுகள்.



அலங்கார அணிவகுப்பு, வண்ண விளக்குகள், கோட்டை கோபுர வடிவமைப்புகள் மேடைகளால் செம்மொழி மாநாடு முடிந்தது.

ஒரு நிதிஅறிக்கைப்போல இருக்கும் என முதல்வர் அறிவித்தார். சுப. வீரபாண்டியனைப் போல நானும் தொலைக்காட்சி பெட்டி முன்பு உட்கார்ந்திருந்தேன்.

நான் என் துனைவியாரிடம் சொன்ன தீர்மானங்கள் அறிவிப்பாக வந்தது.

அதாவது 5 தினைகள் பெயரில் பூங்காக்கள் அமைக்கப் போகிறார்கள். மணல் கொள்ளையைப் பற்றி பாலை பூங்காவில் கும்மி அடிக்கலாம்.

முக்கியம் என்னவென்றால் தமிழ்நாட்டில் தமிழ் இருக்கிறதா?

காங்கிரஸ்காரர் தங்கபாலு 10 கோரிக்கையை வைக்கும் அளவுக்கு தமிழக அரசியல் உள்ளது.

அண்டை மாநிலங்களில் தாய் மொழிப்படிக்காமல் அங்கு கல்வி கற்ற இயலாது, வேலை வாங்க இயலாது என்று சுட்டிக் காட்டும் போது கலைஞர் வீரமணியை பார்த்து நகைக்கிறார்.

இன்று முதல்வர் பேசும்போது தமிழை ஆட்சி மொழியாக்க மத்திய அரசிடம் கோரிக்கையினை வைக்கிறார்.

இங்கு என்ன அறிவிப்புக் கொடுக்கிறார் தெரியுமா?

அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் தமிழ் நாட்டில் ஆட்சி மொழியாக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்ற சொற்றொடரை மட்டும் கையாண்டதை கவனிக்க வேண்டும்.

அதாவது தலைமைச்செயலகத்தில் இருந்து வரும் அரசாணைகள் எத்துனை தமிழில் வருகிறது. இவரால் தன் கீழ் பணியாற்றும் அலுவலர்களை சட்ட அதிகாரம் மூலம் செயல் படுத்த முடியவில்லை. அப்புறம் மக்கள் எப்படி ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

புற்றீசல் போல வளர்ந்துவிட்ட ஆங்கில வழி கல்வியை தமிழக அரசின் கல்வித்திட்டம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது.

பெப்பெ... பெப்பே தான் வாழ்க டமில் என்று கத்தலாம்.

அண்ணா சாலை, திருவாண்மியூர் சாலைகள் பேரங்காடிகளில் இருந்து சிறிய பெட்டிக்கடை வரை எங்கே தமிழ்?

நான்காண்டு சாதனைதான் என்ன?

தமிழ் வழியில் படிக்க என்ன நம்பிக்கையை வைத்துள்ளது இச்செம்மொழி மாநாடு?...

விடை எனக்குத்தெரியவில்லை....

No comments:

Post a Comment