இந்திய ஜனநாயகத்தின் செல்லப்பிள்ளை கேத்தன் தேசாய்.

1800 கோடி ரூபாய் ரொக்கப்பணம்.
1500 கிலோ தங்கம்....நடுவன் புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் கேத்தன் தேசாயிடமிருந்து கைப்பற்றப்பட்ட தொகையே இது. இது  இன்னும் பல மடங்காக உயராலாம்.

ஒரு அரசுத்துறையால் கையாளப்படும் வரவு செலவு கணக்குக்கு கையாளப்படும் தொகை இது.
அடிப்படை உரிமைகளான, நலவாழ்வு கொடுக்கும் நிறுவனத்திற்கு ஏற்பட்ட கதி இதுதான். இங்கு உருவாக்கப்படும் மருத்துவர்கள் தான் சாமானிய மனிதர்களை காப்பாற்றப்போகிறார்கள்.
இன்று(26.4.2010) தமிழோசை நாளிதழின் தலையங்கத்தில் கூட இந்த தேசாயின் அருமை பெருமைகளை கூறியுள்ளது.
ஆம்.
1997ம் ஆண்டு அன்றைய பிரதம பதவியில் இருந்த தேவகவிடா தனக்கு வேண்டப்பட்டவரின் மருத்துவ கல்லூரிக்கு அனுமதிப் பெற இவரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த தேசாய்  பல முதல்வர்களின் வீட்டு சமையலரை வரை செல்லும் அதிகாரமிக்கவராம். (மரியாதைக்கு சமையல் அறை என்று கூறியுள்ளார்கள் போலும்).
இந்திய ஜனநாயகம் இவர்களைப்போல பல நபர்களை செல்லப்பிள்ளையாக தத்துப்பிள்ளையாக வளர்த்து வருகிறது..
அர்சத் மேத்தா, கேத்தன் தேசாய், சந்திரா சாமி, சங்கராச்சாரி போன்றோர் அவ்வப்போது தங்களின் முக முடிகளை மாற்றிக்கொண்டு வார்கள்.
40%க்கு குறைவான மக்கள் வறுமைக்கோட்டின் உச்சியில் தொங்கிக் கொண்டு இருக்க இந்த தேசாய்கள் தான் தலைப்பிள்ளை.
நாளைக்கூட இவரை கௌரமான நபர் என விடுவிக்கப்படலாம்.
அல்லது உடல் நலம் சரியில்லை என்று மருத்துவ மனையில் ஓய்வெடுக்கலாம் அல்லது இந்திய மானம் காக்க தற்கொலை செய்து கொள்ளலாம்.
இவரின் வாரிசுகள் பலர் இருக்கிறார்கள்.
இந்திய சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என என்னையும் உங்களையும் நம்பவைக்க இந்த தேசாய் சிக்க வைக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற ஜனநாயகம் இவர்களுக்கு படுக்கையறை.இதில் பெற்றெடுக்கும் பிள்ளைகள் இப்படித்தான் இருக்கும்.
இப்பணத்தைப் பார்த்து நாமும் வாயை பிளப்போம்.

1 comment:

gumi said...

லஞ்சம் வாங்கினால் தூக்கு தண்டனை, என்று சட்டம் கொண்டுவரவேண்டும். அவர்கள் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் . தூக்கு தண்டனையை ஒரு வருடத்தில் நிறைவேற்ற வேண்டும் ..

Post a Comment