சிங்கள இராணுவ அதிகாரிகள் பயிற்சிக்காக சென்னை வழியாக பயணம்.

நேற்று 18.4.2010, காஞ்சிபுரதில் வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.
இதில் பழ . நெடுமாறன் எழுதிய மூன்றவது அணிக்கு மக்கள் தயார். அரசியல் கட்சிகள் தயாரா ? என்ற பொருள் குறித்து புத்தக அறிமுக்க் கூட்டம் நடை பெற்றது.
இக்கூடட்த்தில் தேசியத்தலைவர் பிராபாகரன்  தாயார்  திருப்பி அனுப்பப் பட்டதற்கு திமுக தலைவர் கலைஞர் அவர்களை அறியாமல் நடக்க வாய்ப்பில்லை. மேலும் நானும் வைகோவும் அம்மையாரை வரவேற்க விமான நிலையம் சென்ற போது  போலிஸ்  உயர் அலுவலர் ஜாங்கிட் தலைமையில் 500 போலிசாருக்கு மேல் என்னை வழி மறித்து தடை செய்தனர். இவர்கள் யாருடைய அதிகாரத்தின் கீழ் வருகிறார்கள்? என்ற கேள்வி எழுப்பினார்.
 மேலும் பிராபாகரன்  தாயார்  திருப்பி அனுப்பப்பட்டதற்கு பின் சிங்கள உயர் இராணுவ அதிகாரிகள், போலிசார் சிறப்புப் பயிற்சிக்காக சென்னை வழியாக சென்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளதாக கூறினார்.

தமிழனை கொன்றொழித்த சிங்களன் எவ்வித தடையுமில்லாமல் செல்ல வசதி, 80 வயது மூதாட்டி சிகிச்சை பெற இங்கு தடை இதுதான் தமிழனின் ஆட்சியா? என்று கேள்வி எழுப்பினார்.
இக்கூட்டத்தில் தோழர் தமிழினியன் தலைமையில் டாக்டர் விமுனாமூர்த்தி புத்தகத்தை வெளிட்டார். பத்திரிக்கையாளர் டி. எஸ். மணி உள்ளிட்ட பலர் பேசினர். இறுதியில் பழ. நெடுமாறன் மூன்றாவது அணியின் தேவைப் பற்றி விரிவாக பேசினார்.

No comments:

Post a Comment