வந்தாரை வாழவைக்கும் தமிழகம். வந்தெறிகள் உரிமைக் கொண்டாடுவார்கள் தமிழகத்தை. மலையாள சினிமா காமெடி? நாயகன் ஜெயராம் தமிழ்த்திரையில் வலம் வந்தவர். கடந்த சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சி நேர்கானலில் தமிழ்ப் பெண்களை தரக்குறைவாக பேசி இருந்தார்.
கேரளாவில் உள்ள ஏசியா நெட் மலையாள டி.வி. தொகுப்பாளர் ஜெயராமிடம் இது பற்றி குறிப்பிட்டு நிஜ வாழ்க்கையில் நீங்கள் வேலைக்காரியை சைட் அடித்து இருக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்து ஜெயராம் கூறும் போது என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி போத்து (எருமை) மாதிரி இருப்பாள் அதைப்போய் எப்படி சைட் அடிக்க முடியும் என்றார். இது அந்த டி.வி. சேனலில் ஒளிபரப்பானது.
ஜெயராம் கருத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் தக்கர் பச்சான், தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும் பாமக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.பிறகு எதிர்ப்பு கிளம்பவே குறிப்பாக மிமிக்கிரி செய்ததாகவும் மன்னிப்புக் கோருவதாகவும் கூறி இருந்தார்.
ஜெயராம் கருத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குனர் தக்கர் பச்சான், தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மேலும் பாமக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.பிறகு எதிர்ப்பு கிளம்பவே குறிப்பாக மிமிக்கிரி செய்ததாகவும் மன்னிப்புக் கோருவதாகவும் கூறி இருந்தார்.
தமிழ்த்திரையில் இயக்குநர் தங்கர்பச்சான் , முதல்வர் கலைஞர், தமிழக பெண்கள் அமைப்பினரும் கடுங்கண்டனத்தை தெரிவித்தார். தமிழே உயிர், சூப்பர் ஸ்டார்கள்,தளபதிகள், நாயகன்கள், திரை கனவு தேவதைகள் எங்கே போனார்கள்.
கற்பு பற்றி குஷ்பு கூறியதற்கு பெரும் கலகத்தையே உண்டாக்கியது தமிழ்த்திரை நட்சத்திரங்கள்.
சின்னத்திரை நடிகை ஒருவர் கூறிய கருத்துக்கு பச்சை பச்சையாக பேசினார்கள் திரையுலகினர். காது கூசும் பேச்சுக்கள். ஊடகத்துறையே உறைந்து நின்றது.
இப்போது தமிழ்ப் பெண்களைப்பற்றி அவதூறாக பேசிய நடிகரை ஏன் தமிழ்த்திரை கண்டிக்கவில்லை.
இரண்டு முக்கிய செய்திகளை இக்கிண்டலில் காணலாம்.
வீட்டு வேலைக்காரி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம்?
தமிழ் பெண்களை கண்ட மேனிக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா?
சம்பாதிக்க தமிழன் பணம்!
கைத்தட்ட தமிழன், தமிழச்சி வேண்டும்.
ஆனால் தமிழச்சியை எருமை என்று கிண்டலடிக்க யார் கொடுத்த தைரியம்?
ஆமா,
தமிழகம் வந்தாரை வாழவைக்கும்.
வந்தேரிகளை தலையில் தூக்கிவைதாடும்.
நல்ல நாடு.

1 comment:
கலைக்கு மொழி,மாநிலம் ஒரு தடையாக இருக்க இயலாது என்று பம்மாத்தும் " கழிசடை" சினிமா நாதாரி கூட்டங்களுக்கு பணமும் பவிசும் மட்டுமே போதும் வேறு எதுவும் தேவை இல்லை. மானம் கெட்டு மரியாதை கெட்டு காசு வந்தால் போதும் என்று ஆடும் காவாலி கூட்டம் இவைகளிடம் எதைத்தான் எதிர்பார்ப்பது என்று ஒரு விபரம் வேண்டாமோ !!
Post a Comment