தமிழ் மட்டும் ஆட்சி செய்யப்போவது இல்லை...


ஓய்வு அறிவிப்பு அரசியலில், அதுவும் கழக அரசியலில் பரபரப்பாக்கி விட்டது. ஓய்வுக்கு முன் நடைபெறும் அவரிஆட்சியில்தான் ஓர் இனம் அழிக்கப்பட்டது. அமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டது.
ஈழத்தமிழினம் முள்வேலிக்குப் பின்னால் கேட்பாறற்று கிடைக்கிறது.
வழக்கம் போல திமுக பொதுக்குழுவில் இலங்கையில் அதிகார பகிர்வை பற்றி பேசி தீர்மாணமும் ? இயற்றி இருக்கிறது.
ஆனால்
நடப்பது என்ன? அதிகார அத்து மீறல்...
இராணுவ அதிகார குவிப்பு அன்று ஈழத்தமிழினத்தை அழித்தது. இப்போது சிங்களத்தை அரிக்கிறது. பக்சேவை எதிர்க்கும் சிங்களர்களை நோக்கி துவக்கு திரும்பி இருக்கிறது.
ஆனால் அதிகார பகிர்வை இப்போது பேசுகிறார் கலைஞர்.
பக்சேவின் இராணுவ அழித்தொழிப்பில் ஈழத்தமிழினம் விழுந்ததில் தெரிந்தோ தெரியாமலோ திமுகவுக்கு பங்கு இருக்கவே செய்கிறது.
கலைஞரின் அரசியல்  வரலாற்றில் இது ஒரு கருப்பு பக்கமே.
இங்கே எப்படி..
அரசுக்கட்டிலில் கழக ஆட்சிகள் இருக்க..
காலடியில் தம்மிழ் வீழ்ந்து துவண்டு போயிருக்கிறது.
செம்மொழி அரசு ஆணைகளில் அச்சாகி கிடக்கிறது..
ஆனால் இரண்டு பணிகளை
அடிக்கடி கவனிக்கிறார் கலைஞர்.
ஒன்று புதிய சட்ட மன்றக்கட்டிடம்.
மற்றொன்று செம்மொழி மாநாடு ? இதை முடித்துவிட்டால் அவரிகடமை முடிந்ததாக நினைக்கிறார் போலும்.
ஆனால் ஒன்று மட்டும் செய்யப்போகிறது இவ்விரு நிகழ்வுகளும் கலைஞர்.. கலைஞர். கலைஞர்.. என்று பக்க பக்கமாய் எழுதப்பொகிறது...
திரையுலகத்தின் விருது மழையில் நனைந்த கலைஞர் இதிலும் நனையப் போகிறார்.
நமது தேவை
ஈழமக்களின் படு கொலைக்கு வைக்கபட்ட கரும்புள்ளி போல் அல்ல.
தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சியிலே இல்லை.
அரசு அலுவலகங்களில், கல்வி நிறுவனங்களில், நீதிமன்றங்களில், தெருக்களில், ஊடகங்களில்... மொத்ததில் எங்கும் தமிழ் இல்லை...
தமிழில் படிக்க முடியாது. அப்படி படித்தாலும் அவனால் வேலை வாங்க முடியாது...
எப்போதும் போல கலைஞர் ஆட்சியில் இருப்பார்..
ஓய்வு பெற்றாலும்... ஸ்டாலின் அல்லது அழகிரி யாராவது ஆட்சியில் இருப்பர்.

ஆனால் கழகங்களின் ஆட்சியில் தமிழ்  மட்டும் ஆட்சி செய்யப்போவது இல்லை...

2 comments:

ஜோதிஜி said...

முழுமையான தவறு இல்லையென்றாலும் முக்கிய தவறாக இவர் முன்னால் வந்து நிற்பது மனதிற்கு சற்று வருத்தமாக இருக்கிறது.

ஜோதிஜி said...

பதிவேற்றுவதற்கு முன் வரிகளின் வரிசையையும் அமைப்பையை சரிசெய்து விட்டு பதிவேற்றவும். வாழ்த்துகள்.

Post a Comment