பாமக இனிமேலாவது நல்ல முடிவுகளை எடுக்குமா?



அதிமுக கூட்டணியில் இருந்து விலகி நடந்த இடைத்தேர்தலில் 49(ஓ)வில் ஓட்டளிக்கப்போவதாக அறிவித்தது பாமக. ஆனால் வந்தவாசி தொகுதியில் மட்டும் 12 பேர் மட்டுமே49(ஓ)விற்கு ஆதரவாக ஓட்டளித்திருந்தனர். தனித்தொகுதியான வந்தவாசியில் வன்னியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களையே பெரும்பான்மையாக கொண்ட தொகுதி. ஆனால் பாமவுக்கு விழுந்த ஓட்டுக்கள் வெறும் 12 மட்டுமே. மற்றவர்கள் எல்லாம் தங்கள் விருப்பப்பட்ட கட்சிகளுக்கே வாக்களித்துள்ளனர். பல இடங்களில் நடந்த பணம் பட்டுவாடா பாமகவை சேர்க்காத்து தொண்டர்களை? வருத்தத்தில் குழப்பத்தில் ஆழ்த்தியது என்பது உண்மையே. குழப்பமான இம்முடிவை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களின் கரன்சிகளை காட்டி ஓட்டுக்களை பெற்றுக்கொண்டனர்.

சரியான முடிவுகள் எடுக்காத பாமகவுக்கு மீண்டும் அதிர்ச்சி முடிவுகளை மக்கள் தந்துள்ளார்கள். ஓட்டு அரசியலில் அடிப்படை குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையிலேயே கூட்டணிகளை அமைக்க கற்றுக்கொள்ள வேண்டும். வெற்றியே இலக்கு, அமைச்சர் பதவிகளே தங்கள் தொலைநோக்கு என்பது “0” முடிவுகளைத் தான் கொடுக்கும். தமிழகத்தின் வாழ்வுரிமைக்காக போராடும் அமைப்பு என்ற பெயர் பாமகவிடம் இருந்து நழுவிச்செல்கிறதே என்பதை இத்தேர்தல் காட்டுகிறது.

No comments:

Post a Comment