யார் போயஸ் தோட்டத்துக்கும் கோபாலபுரத்துக்கும் காவடி தூக்கச்சொன்னது ?


அதிமுக கூடணியில் இருந்து பாமக வெளிவந்துள்ளது. போர் குணமுள்ள உழைக்கும் மக்கள் அணிதிரளும் போது சாதிய அடையாளத்துடன் திறள்வது இயற்கையே. சாதி யதார்த்தத்தில் சமூகத்தில் உள்ளது. 2000 ஆண்டுகளா சாதிய உணர்வு ஒவ்வொரு அணுக்களிலும் கரைந்துள்ளது. பாமகவும் பெரும்பான்மையாக உள்ள வன்னியர்களை ஒருங்கிணைத்து ஒரு போர் குணமிக்க இயக்கத்தை சமூக நீதிக்காக தமிழகத்தில் நடத்தியது. தலைமை தாங்கிய இராமதாஸ் ஒரு கட்சியாக பாமகவை உருவாக்கினார். தமிழ்த்தேசியம்,ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு, கிராமிய பொருளாதாரத்தை முன்னெடுக்கும் சட்ட அமைப்பு, சமூக நீதி, தனி ஈழ ஆதரவு, தமிழ்த்தேசிய தன்னுரிமை போன்ற முழக்கங்கள் சமூக மாற்றத்தை விரும்புவோரிடம் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்தது. ஆனால் ஓட்டு அரசியலில் சில எம்பி, எம்எல்ஏ பதவிக்காக , கொள்கைகளை துறக்க ஆரம்பித்து அதிமுக திமுக என்ற அணிமாற்றம் மக்களிடையே ஏமாற்றத்தையே கொடுத்தது. பாமக உருவெடுத்த பிறகு வன்னியர் ஆதிதிராவிடர் மோதல்கள் குறைந்து போனது உண்மையே. வன்னியர் ஆதிதிராவிடர் ஒருங்கிணைப்பு மாநாடுகள் பல நடத்தினார் இராமதாஸ் அவர்கள். திருமாவளவன் இராமதாஸ் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் ஆளும் அதிகார அமைப்புக்கு சங்கடத்தையே கொடுத்தது.

ஓட்டு அரசியலில் தன்னை கொள்கைகளை வைத்து அடையாளப்படுத்த வேண்டிய கட்சிகள், சில அதிகார சீட்டுக்களுக்காக கொள்கைகளை காற்றில் பறக்க விடத்துணிந்தார். பணம் , சாதி, ஊழல், அரசதிகாரம் என்ற குட்டையில் விழுந்த பாமக சில சீட்டுகளை பெறுவதும் இழப்புமாக நிகழ்வு நடந்தது. பார்ப்பனிய கருத்தியலின் உருவமான அதிமுக பாமகவை திட்டமிட்டு வெளியேற்றியது. கூடணியில்லாமல் நிற்கிறது பாமக.

இப்பொது கொள்கை பேசலாம். அடுத்த சட்ட மன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணிவர அதிக சாத்தியங்கள் உள்ளது.

பாமகவின் எதிர்காலம் என்ன? என்று தினமணி இணையம் கருத்து கேட்கும் அளவுக்கு துணிந்துள்ளது.

இராமதாஸ் நாகர்கோவிலில் நடைப் பெற்ற செய்தியாளர் நேர்கானலில் கூட கோபாலபுரத்திற்கும் போயஸ்தோட்டத்திற்கும் எங்களை தள்ளி விடுகிறார்கள். என்றவாறு பேசியுள்ளது அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது. இராமதஸ் அவர்களின் இயலாமையின் வெளிப்பாடகவே தோன்றுகிறது.

யார் போயஸ் தோட்டத்துக்கும் கோபாலபுரத்துக்கும் காவடி தூக்கச்சொன்னது ?

பாமக தொண்டர்களா ?

அரசியல் அதிகாரம்? ஓட்டுச்சீட்டு நாயகம் ? எவ்வளவு நாளைக்கு கைக்கொடுக்கும் ?

மக்கள் தொலைக்காட்சி கொள்கைகள் எதற்கு ?

இப்படி மாறி மாறி காவடி தூக்கினால் அரசியல் அங்கிகாரம் மக்கள் வழங்குவார்களா ?

தேர்தல் கமிஷன் வேண்டுமானல் அங்கிகாரம் கொடுக்கும் ?

தோற்றுவிட்டால் கொள்கை பேசு.

வெற்றிப்பெற்றால் கூட்டணியைப்பற்றி பேசு.

துதிபாடு இக்கொள்கையை தான் பார்ப்பனியம் கடைபிடிக்கச்சொல்கிறது.

இப்போக்குதான் போயஸ் தோட்டத்துக்கும் போபாலபுரத்துக்கும் காவடியை தூக்கச்சொல்கிறது.

இப்போதும் கெட்டுவிடவில்லை. போர் குணமிக்க அமைப்பாக வளர பாமவுக்கு வாய்ப்புள்ளது. தோழமைக்கு விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள்,சிறுபான்மை அமைப்புகள், தமிழ்தேசிய அமைப்புகளை அணிசேர்க்கலாம்.

கொள்கைகளை உதறிய ஓட்டு அரசியல் பாமகவின் எதிர்காலம் என்ன என்ற தினமணியின் கேள்விக்கு பதில் அளித்துவிடும்.

No comments:

Post a Comment