சிங்கள அரசின் ஊது குழலாக திமுக அரசு.

சிங்கள அரசின் ஊது குழலாக திமுக அரசு.

சுமார் 3 இலட்சம் தமிழர்களின் வாழ்க்கை அகதி என்ற பெயரில் திறந்த வெளிச்சிறையில் சிறை அடைத்துள்ளது. மாதத்திற்கு 1500 பேர் கமுக்கமாக செத்துக் கொண்டு இருக்கிறார்கள். புலிகள் போர்வையில் இளைஞர்கள் விசாரணை என்ற போர்வையில் காணாமல் போகிறார்கள். தமிழர்கள் நிர்வாணப்படுத்திக் கொல்லும் காட்சிகள் உலகையே உலுக்கியுள்ளது. இதை சித்தரிக்கப்பட்டவை என்று கோயபல்சை மிஞ்சும் வகையில் பேசியுள்ளார் பக்சே. கேட்பாரில்லை. நாடில்லாத நாதியில்லா தமிழினம் கொடுமைகள் அனுபவித்து வருகிறது.

பிராபரன் கொல்லப்பட்டார் என்ற இலங்கையரசின் செய்திகளை மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்பி சுய இன்பம் கண்ட இந்திய ஊடகங்களுக்கு 3 இலட்சம் தமிழர்களின் இழி நிலை தெரிவதில்லை. இவர்கள் படித்த ஜேர்னலிசத்தில் ஈழதமிழர்களிக்காக பேசுவது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாம்.

வெடகக்கேடு.

பக்சேவின் ஊது குழலா?

இப்போக்கில் தமிழக அரசும் பக்சேவின் ஊது குழலாக மாறிவருகிறது என்பது உண்மையே.

அமெரிக்க பெண் மருத்துவரும் மனித நேய ஆர்வலரும் எலியன் ஷெண்டர். இவர் ஈழப்பகுதியில் சுனாமி, போர் போன்ற பேரழிவு நிகழ்ந்த காலங்களில் தமிழ் மக்களுக்காக போராடியவர். 2005 ஆண்டில் இருந்தே ஈழமக்களுக்காக போராடி வருகிறார்.

இப்போது இலங்கையில் முள் வேளிக்குல் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்காக, அவர்களின் இழி நிலையை உலம் முழுவதும் பேசி வருகிறார். இவர் புலியோ தமிழரோ அல்லர். மனித ஆர்வலர். இதற்காக அமெரிக்க 2007 அமெரிக்காவின் மன நல மருத்துவர்களின் சார்பில் விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

இவர் வன்னிப்பகுதியில் தமிழ் மக்கள் படும் துயரத்தை பகிர்ந்து கொள்ள சென்னை வருவதாக இருந்தது. ஆனால் மைய அரசு அவரின் விசாவை ரத்து செய்துள்ளது. ஈழமக்களின் இரத்தத்தை பற்றி பேசக்கூடாது என்பதே. தமிழர்களின் உடன்பிறப்பை பேசும் திமுக மைய அரசுக்கு ஒத்து ஊதும் விதமாக சென்னை போலீஸ் அவரின் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்காமல் தடை விதித்துள்ளது.

வேடிக்கை என்ன வென்றால் ஈழத்துயரத்தை வெளிநாட்டினர் தான் இப்போது வெளி கொணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

வழக்கம் போல அமைதி காப்பதால்...

திமுக அரசு சோனியாவின் பக்சேவின் ஊது குழலாக மாறி வருகிறது.

(செய்தி: தினமணி .செப் 11-2009)


No comments:

Post a Comment