ராகுலுக்கு சில டிப்ஸ் – கட்சியை வளர்க்க.


மூன்று நாள் சுற்றுப்பயணம் கட்சியை வளர்க்க தழைக்க பல ஐடியாக்களோடு வரும் ராகுலுக்கு சில டிப்ஸ்.

1. கிளை வட்ட அளவிலும் யாரும் வேட்டியை கட்டக்கூடாது. எதிரிகள் !? உருவும் அபாயத்தில் இருந்து தப்பிக்கலாம்.

2. தேசிய ஆண்களின் ஆடை பைஜாமா என்று அறிவிக்கலாம்.

3. கண்டிப்பாக உள்ளாடை (ஜட்டி) அணிவது கட்டாயமாக்கலாம். வேட்டியை உருவினாலும் கவலை இல்லை.

4. வாசன் ,இளங்கோவன் கோஷ்டிகள் போதாது. கிளைக்கு கிளை கோஷ்டிகளை உருவாக்கலாம். அப்படியாவது தலைகளை தேற்றலாம்.

5. டெல்லியில் கூடும் தேசிய காரிய கமிட்டி கூட்டத்தைப்போல ஆளுக்கொரு திண்டுகளை மெத்தை உருளைகளை வைத்துக் கொள்ள சிபாரிசு செய்யலாம்.

6. நாளை காங்கிரஸ் ஆட்சியே, இப்போது 2010 சொல்லலாம் பிறகு ஒரு 5யை கூட்டிக் கொள்ளலாம்.

7. நமக்கென்று திமுக அதிமுக பொதி கழுதைகள் இருக்க கவலை இல்லை.

8. ஜெயிக்கர வரை காலை பிடிக்கலாம். பிறகு நெஞ்சைக்கூட பிடிக்கலாம்.

9. போஸ்டர் கலாச்சாரத்தை தீவிரப்படுத்தலாம்.

10. பெரும் பிரச்சனை என்றால் எல்லைத்தாண்டிய பயங்கரவாதம். கத்தலாம் கூப்பாடு போடலாம்.

11. இனப்படு கொலையா அதான் 100 கோடி கொடுத்தோமே என்று சொல்லலாம்.

12. தூக்கு தண்டனை கைதி நளினிக்கு ஐஸ் வைத்து பிறகு தீவைத்தது போல பல டெக்னிக்குகள் யோசியுங்கள்.

வாழ்க இந்தியா!

ஜெய் சோனியா.

No comments:

Post a Comment