
: ""இந்தியாவில் 80 கோடி இந்துக்கள் இருந்தும், இலங்கை வாழ் இந்துக்களான தமிழர்களை காப்பாற்ற முடியாதது வேதனையளிக்கிறது,'' என இலங்கை தமிழ் எம்.பி., சிவாஜிலிங்கம் பேசியுள்ளார். இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில், கோவை ராஜவீதி தேர்நிலை திடலில் விநாயகர் ஊர்வலம் துவங்கியது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, இலங்கை தமிழ் எம்.பி., சிவாஜிலிங்கம், ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசியதாவது: இலங்கையில் நடக்கும் அவலத்தை சித்தரிக்கும் வகையில், இ.ம.க.,வினர் இந்த ஊர்வலத்தை நடத்துகின்றனர். இலங்கையில் வாழும் தமிழர்களில் 80 சதவீதம் பேர் இந்துக்கள்; மற்றவர்கள் கிறிஸ்தவர்களாகவும், முஸ்லிம்களாகவும் உள்ளனர். இவர்களை இனவெறி சிங்களர்கள் இன்று நேற்றல்ல, 1958 முதல் அழித்து வருகின்றனர் என்றும் இந்தியாவில் 80 கோடி இந்துக்கள் இருந்தும், ஈழத் தமிழர்களை காப்பாற்ற இயலவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இவ்வாறு சிவாஜிலிங்கம் பேசியுள்ளார்.
சிங்கள பேரினவாத்த்தால் ஈழமக்கள் படுகொலை செய்யப்பட்டபோது, தமிழகத்தில் பல்வேறு மட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, அரசியல் தலைவர்கள் மத்தியில் இன அழிப்பு நடவடிக்கைகளை எடுத்துக்காட்டி எழுச்சியை உண்டாகியதில் சிவாஜிலிங்கத்திற்கு பெரும் பங்கு உண்டு.ஆனால் நடந்து முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் பிஜேபியை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்த்ததாகவும் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது.
இந்து தேசியமும், இந்திதேசியமும் ஈழமக்களை காக்காது, கொல்லவே செய்யும் என்பதை நாமும் பல்வேறு அமைப்புகளும் கூறிவந்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிஜேபி கூட ஈழப்படு கொலை குறித்து வருத்தம் மட்டுமே தெரிவித்தது. ஈழம் உருவாவதை பிஜேபி எதிர்க்கும் என்பதை வெங்கையா நாயுடு அடிக்கடி கூறியதை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள்.
ஈழப்படுகொலை நடை பெற்ற போது இந்த இந்து மக்கள் கட்சி எங்கே சென்றது.
செத்துக் கொண்டு இருந்த மக்களுக்காக, தெருவுக்கு தெரு விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடத்தும் இந்த அமைப்புகள் எங்கே சென்றது.
ஒரு சின்ன ஊர்வலம் நடத்தி இருக்குமா ? .வேண்டாம், படு கொலையை கண்டித்து ஒரு அறிக்கை, சுவரொட்டி எங்கே சென்றது இந்து உணர்வு. சிவாஜிலிங்கம் தான் பதில் சொல்ல வேண்டும். தீக்குளித்து செத்த முத்துகுமாரின் எழுச்சியின் போது எங்கே சென்றது இந்து மதக்கட்சிகள்.
எப்படி காங்கிரஸ் ஈழ எதிர்ப்பு நிலையை வெளிப்படையாக காட்டிய போது, அதற்கு மாற்றாக ஏன் பிஜேபியும்,ஆர் எஸ் எசும் ஈழ ஆதரவு நிலையை எடுக்க வில்லை.
எனென்றால் இருவருக்கும் ஒரே நிலைபாடு
காங்கிரசுக்கு இந்தி தேசியம்
பிஜேபிக்கு இந்து தேசியம் இரண்டு தேசிய கருத்து உருவாக்கங்களும், தமிழ்தேசியத்தை எதிர்க்க /அழிக்க உருவாக்கப்பட்ட இரட்டை குழல் துப்பாக்கியே.
இது நல்ல குண்டு, அந்த குண்டுக்கு இரத்தம் வராது என்பது எல்லாம் மாயையே.
தமிழகமே கொதிநிலையில் இருந்தபோது 70 கோடி இந்துக்கள் அமைதியாக சலனமற்றே இருந்தார்கள் என்பதே உண்மை.
இது தான் யதார்த்தம்.
காரணம் இந்து உணர்வு போலியானது, போலியான கருத்தியலின் கூப்பாடே அது.
இந்து தேசியமும், இந்தி தேசியமும் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது. விடுதலை போராட்டங்களை அழிக்கவே செய்யும் என்பதை சிவாஜிலிங்கம் உணர வேண்டும்.
1 comment:
yes yes you are correct. BJP and RSS never accept Tamilelam and thamilars. Tamizha wakeup.
maharaja
Post a Comment