

எல்லாம் பணத்தை இலக்காக வைத்தே அனைத்து நிகழ்வுகளும் இயக்கப்படுகிறது. நம்மை கனவுலகில் மிதக்கவிடும் திரைப்படங்கள் விதிவிலக்கில்லை. அதுவும் விஜய் நடித்துக்கொண்டு இருக்கும் படம் ’வேட்டைக்காரன்’, அஜித்தின் ”அசல்” படங்கள் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. டீன் வயதுக்காரர்களை குறிவைக்கிறார்கள். அவர்களின் கனவு வாழ்க்கையை விரிவு படுத்துகிறார்கள்.
ஒருவர் தளபதியாகவும் மற்றொருவர் தலை- யாகவும் முடிச்சூட்டிக் கொண்டு இருக்கிறார்கள். கேட்டால் இரசிகர்களின் சிம்மாசனம் என்பார்கள். ஏற்கனவே கருப்பு “ கேப்டனை” ஊழல் ஒழிப்பு அத்தாரிட்டியாக தமிழகத்தை வலம்வந்து கொண்டு இருக்கிறார்.
பொதுவாகவே ஊடகங்கள் இவர்களின் வரப்போகும் படங்கள், வரப்போகும்?! அரசியல் வாழ்க்கையை பேசும்.
இவர் அவரைத்திட்டுவார். பெயரைச் சொல்லமாட்டார்.
அவர் இவரைத்திட்டுவார் பெயரைச் சொல்லமாட்டார்.
ஏற்றிவிட தாயில்லை தந்தையில்லை...
பீனிக்ஸ் பறவை...
வெற்றி உனக்கு மட்டுமல்ல.. என சினிமாவில் பேசுவார்கள். தங்களுக்கான ஒரு கூட்டமே சைலண்டாக (ரசிகர்களை ஆட்டு மந்தைகளாக பாவிக்கும் மனோபாவம்) இருப்பதை காமெடியன் விவேக்கை வைத்து சொல்ல வைப்பார்கள்.
என் தந்தை காலத்தில் எம்ஜிஆர்-சிவாஜி
என் காலத்தில் ரஜினி-கமல்
என் மகன் காலத்தில் இப்போது விஜய் –அஜித்
இவர்களின் கூலியோ ? பல கோடிகள்.
விசில் அடிக்கும் நமக்கு நாயகனின் சாதனை ?
என தல, தளபதியின் சம்பளம் இவ்வளவு கோடிகள் என இளைஞர்கள் பிரமிப்பின் விளிம்பில் உட்கார வைக்கப்படுகிறார்கள்.
தயாரிப்பாளர் வாழ..
தல தளபதிகள் மேலும் கோடியாதிபதிகளாக
டீக்கடையில் நேற்று நான் பேசிக்கொண்டு இருந்தேன்.
இன்று என் மகன் பேசிக்கொண்டு இருக்கிறான்.
அனைத்து ஊடகங்களும் இவர்களை பேசுகிறது.
இவர்கள் பேசவைக்கிறார்கள்.
வேட்டைகாரர்கள் போட்ட அசலை வட்டியோடு எடுக்க கோடம்பாக்க கும்பல்கள் நம்மை பேசவைக்கிறார்கள்.
அவர்கள் தங்களை பேசப்படுபவர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.
நாம் மட்டும் என்ன சும்மாவா?
அவர்களைப்பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறோம் ?
5 comments:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
நன்றி. ராபின். எல்லாவற்றின் நடவடிக்கைகளுக்கும் பின்னால் அவர்களின் நலன் உள்ளது.
ஆப்பு அடிக்கிறவனுக்கும் நன்றி.
super thalaivaa
Post a Comment