லஞ்சம் தான் !... ஆனா ஒழுக்கமானவன்...

அரசுத்துறைகளில் கேட்கும் செய்தி இதுவே..

அவர் கைநீட்டி காசு வாங்கிட்ட்டாருன்னா, சொன்னப்படி செய்வாரு.

அவரை நூற்றுக்கு நூறு நம்பலாம்.

இன்னொரு முகத்தையும் பார்க்கலா,.

அந்தாளா? ஜீவோ பார்ப்பான், பழைய பைலை பார்த்துதான் வெளியே அனுப்புவான். அவன் கிறுக்கு ஒருமாதிரி.

என்ற இருவேறு துருவங்களையும் சந்திக்கின்றோம்.

ஊழல் தடுப்புத்துறை இருப்பதைக் காட்டிக் கொள்ள அங்கொன்று இங்கொன்றுமாக நடவடிக்கை எடுப்பார்கள். கேசுக்கு கணக்காச்சு. இதுதான் நிலைமை.

சார்பதிவாளர் அலுவலகம், காவல் துறை, மின்சாரம், வீட்டு வசதி வாரியம் என டாப் 10 பட்டியல் இடலாம். நீதித்துறை என்ன விதி விலக்கா ? வழக்கு கட்டு சீக்கிரம் வர, பதிவு எண்ணை சீக்கிரம் பெற மேற்படியானை கவனித்தால் தான் வேலை நடக்கும்.

சின்ன புள்ளி விவரம்.

ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 880 கோடி ரூபாய்கள் ஊழலில் திரண்டுள்ளது. அரசு திட்டங்களைப் பெற மூன்றில் ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க வேண்டுயுள்ளது (http://10hot.wordpress.com/2009/01/28/டாப்-10-லஞ்சம்-பெறும்-துறைக/).

கையூட்டு கொடுக்க நமக்கு உடனே வேலையாக வேண்டும்.

விதிகளைப் பார்க்கக்கூடாது.

காசு கொடுத்துவிட்டு வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்ற காரணங்களை சொல்லுகிறார்கள்.

உண்மையாக பணிபுரிபவனுக்கு பிழைக்கத்தெரியாதவன், கிறுக்கு என்ற பெயர் மட்டுமே கிடைக்கும்.

இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என்று சொல்லும் சுவருக்கு மட்டுமே தெரியும். மேற் சொன்ன வாசகங்கள் எங்கெங்கு இருக்கிறதோ அங்குதான் அதிகம் கையூட்டு பெறப்படுகிறது.

காரணம்..

முதலாளித்துவம் சொல்லும் செய்தி

எப்படி வேண்டுமானாலும் பிழை. விதி இருந்தால் பிழைப்பாய். அவனுக்கு நேரம் சரியில்லை என்று சொல்லும்

நமது கல்வித்திட்டம், பயிலும் முறை.

பணம் கொடுத்து படித்து, வேலை வாங்கி பின்னர் இப்படிதான் வேலை செய்தாக் தான் கொடுத்தை ஈட்ட முடியும்.

பணமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது இச்சமூகத்தில். அதை தான் பணம் பாதாளம் பாயும்.

மேலிருந்து கீழ் வரை.

பணத்தை முன்னிலைப்படுத்தும் கல்வி, வேலை, சமூக அமைப்பு, சுரண்டல் எல்லாமே மூல காரணங்கள்.

சங்கர் எடுத்த இந்தியன் படம் ஊழலை எதிர்க்க மகனையே கொல்வார் இந்தியன் தாத்தா. ஆனால் அப்பட டிக்கெட்டுக்கள் பல வாரங்கள் பிளாக்கில் தான் டிக்கெட்டே விற்றது, இது தான் இந்திய நாயகம்.

இவ்வமைப்பு மாற்றாத வறை இப்படித்தான் குரல் கேட்கும்,

அவர் கைநீட்டி காசு வாங்கிட்டாருன்னா, சொன்னப்படி செய்வாரு.

அவரை நூற்றுக்கு நூறு நம்பலாம்.

4 comments:

கலையரசன் said...

நிஜமாகவே நீங்கள் அஞ்சாமதான் எழுதுறீங்க பாஸ்!!

அஞ்சான் said...

நன்றி. கலை குறிப்பிட்ட எல்லை வரை தான் இச்சமுகம் எழுதவைக்கும்,

அஞ்சான் said...

நன்றி. கலை. ஓர் எல்லை வரை தான் என்னை எழுத அனுமதிக்கும். பிறகு. இந்த வலைப்பதிவு சுதந்திரம் எல்லாம் !!!!!!!!!!!!???????

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment