நாளை எழப்போகும் வணங்காமண்ணை தமிழக மண் வணங்கும்.


ஒரு படுகொலைக்காக ஒரு இனத்தையே சிரச்சேதம் செய்யப்பட்டுவிட்டது. முகாம் பெயரால் சொந்தமண்ணின் மைந்தர்கள் அகதி முகாம்களின் முள்வேளிகளுக்கு பின்னால்.


· தாய் மண்ணுக்கான இடர் உதவிப் பொருட்களோடு வந்த வணங்காமண் கப்பலை சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. பல நாட்கள் நடுக்கடலில் தவித்த நிலையில் இருந்த வணங்காமன் கப்பல்.....

சட்ட மன்றத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் முயற்சியால் அனைத்து பொருட்களும் இலங்கைக்கு செல்ல ஆவணச் செய்யப்பட்டுள்ளதாக கலைஞர் தொலைக்காட்சியும் மற்ற ஊடகங்களும் வெற்றிச்செய்தியாக அறிவித்த்து.

“தவித்த வாயிக்கு தண்ணீர் கொடு “ என்பார்கள். இங்கும் தண்ணீர் கொடுத்து இருக்கிறார்கள். 1 இலட்சம் கட்டணத்தை பெற்றுக்கொண்ட பிறகே தண்ணீரின்றி தவித்த பணியாளர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

இது தான் கலைஞரின் வெற்றியா?

இத்துறை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கையில் உள்ளது ? பச்சைத்தமிழன் மீண்டும் மீண்டும் துறோகத்தை நிருபித்துக் கொண்டே இருக்கிறான்.

சிங்கள அரசு பெற மறுத்த பொருட்களை ஏற்றி அனுப்பும் செலவை ஏற்றுக் கொள்ள இந்திய அரசு மறுத்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது. ஆகும் செலவை ஐரோப்பிய தமிழர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. இத்துறை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அமைதிகாக்கிறார். இது சோனியாவின் அமைதி. கலைஞரின் அமைதி.


· ஒர் இனம் அழிக்கப்பட்டுள்ளது. இப்படுகொலைக்கு எந்தவித வெளியுறவு கொள்கையும் இல்லை. சோனியாவின் துயரம், இராகுல் பியங்காவின் வேதனைக்கு பரிகாரம் தேடி இருக்கிறார்கள் 25 வருடகால ஈழத்தமிழின எழுச்சி மூவர்ணக் கொடி கம்பத்தின் கீழே புதைக்கப்பட்டுள்ளது.நாடற்ற ஈழமக்களின் கனவு துரோகங்களால் நசுக்கப்பட்டுவிட்டது.


· துரோகத்தின் தூண்களாக

சோனியாவின் அமைதி..

கலைஞரின் “ கண்டு கொள்ளாத அரசியல் “

ஜெயாவின் கயமையான ஆதரவு முழக்கம்..

வெற்று வேட்டு அரசியல் கட்சிகளின் முழக்கங்களை பார்த்து.

வணங்காமண் தமிழகத்தை விட்டு விடை பெறுகிறது.


· புதிய கனவுகளோடு...

புதிய அரசியலோடு...

அப்போது

நாளை எழப்போகும் வணங்காமண்ணை தமிழக மண் வணங்கும்.

ஓவியம் : வீரச்சந்தானம்

3 comments:

சாந்தி said...

வணங்காமண் என்பது வெறும் கப்பல் அல்ல. புலத்துத்தமிழரின் உழைப்பு நம்பிக்கை எதிர்பார்ப்பு.

அந்தக்கப்பலை பேரீச்சம்பழத்துக்கு அனுப்ப வேண்டுமென்று கலைஞரும் இந்திய அதிகார அரசும் முடிவெடுத்துவிட்டது. என்ன செய்வது தமிழினம் யாருமே இல்லாத இனமாகிவிட்டது.

சாந்தி

Anonymous said...

வணங்காமண் வெறும் கப்பல் அல்ல. ஈழமக்களின் உயிர் தாய்மண். மக்களின் விடுதலையின் வடிவமே வணங்காமண். ஒன்றாய் விழுந்தவர்களை ஆயிரமாய் கோடியாய் எழவைக்கும். சாந்திக்கு நன்றிகள்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment