

நொச்சியும் முல்லையும்
நெய்தலும் பறிபோக
நூறாக நூறாக நூறாயிரமாகக்
கூறாகி நாராகிக்
குண்டேந்திச் சவமாகி
ஆறாகப் பாய்ந்திட்ட
அரும்புகளின் குருதிக்கு
சேறாகி அழுகும் எம்
செந்தமிழர் பிணத்துக்கு
சிங்களனே, இந்தியனே
சீனனே பதில் என்ன ?
ஈழம் இனி...
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒட்டுமொத்தமாக முடிந்துவிட்டது என்று கருதிக் கூத்தாடுகின்றவர்கள், இலங்கையில் மட்டுமில்லை, தமிழ்நாட்டிலும் இருக்கின்றார்கள். எந்த ஒரு போரிலும், களங்கள் மாறி மாறி வரும். களத்தை இழக்கும் போதெல்லாம், போரையே இழந்து விட்டதாக எண்ணிக் கலங்க வேண்டியதில்லை. எந்த நோக்கத்திற்காகப் போர் தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கான தேவைகள் அப்படியே இருக்கும் வரை, போர் ஓய்வதில்லை. ஈழ மக்களின் நல வாழ்வு, ஜனநாயக உரிமைகள் முதலானவற்றை மீட்டுக் கொள்வதற்காகவே, அங்கு விடுதலைப் போர் தொடங்கப்பட்டது. அவை முன்னிலும் இப்போது மோசமடைந்துள்ளனவே தவிர, முன்னேற்றம் என்பது முனையளவும் இல்லை. எனவே அங்கு இன்னொரு காலகட்டத்தில், இன்னொரு வடிவத்தில் அந்தப் போர் மையம் கொள்ளும் என்பதே உண்மை.
விடுதலைப் புலிகள் தங்களுக்காகப் போராடவில்லை. தங்களை அழித்துக் கொண்டு மக்களுக்காகப் போராடுபவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் சிந்தனை, சொல், செயல் அனைத்தும் அந்த மக்களைச் •ற்றியே •ழலும் தன்மையது என்பதை உண்மையானவர்கள் அறிவார்கள். அவரைக் குறை சொல்பவர்களுக்கும், கொச்சைப் படுத்துகின்றவர்களுக்கும் காலம் விடை சொல்லும் .
தமிழன் ஊர்தி
விஞ்ஞானி சார்லஸ் விமானி யானான்
தந்தை மகற்காற்றிய ஞானக் கொடை
மகன் தந்தைக்காற்றிய வானப் படை
தகப்பனுக்குச் செய்த உதவியா அது ? இல்லை
தமிழனுக்குச் செய்த ஊர்தி அது.
மீன்கொத்தி போல் குறி தவறா
வான் கொத்திச் சார்லஸ்
வியட்நாம் கியூபா உட்பட
விடுதலைப் படை எதனிடமும்
விமானப் படை கிடையாது என்பதே
புலிப்படை பெற்ற
தனிப்படைச் சிறப்பு.
- கவிஞர் தணிகைச் செல்வன்
நன்றி :கருஞ்சட்டைத் தமிழர்
2 comments:
உங்கள் கரங்கள் எங்கள் கரங்கள் என்றும் மாதிரியே ஒளித்து கொண்டே இருக்க வேணும். அது தான் கனவுகளோடு உறங்கும் எங்கள் முப்பத்து ஐயாயிரம் புனிதர்களுக்கும், இரண்டு இலட்ச்சத்துக்கும் மேற்பட்ட அணைந்த அணைத்த கரங்களுக்கும் நாங்கள் செய்யும் மிகப் பொரும் கைம்மாறு.
உண்மையான தமிழன் பின்னால் வருவான்...
தமிழன் இல்லாதவன் போராட்டத்தை பற்றியே பேச தகுதியற்றவன்,பின் ஏன் விமர்சனம் செய்கிறான்?
Post a Comment