
ஈழத்தமிழர் படுகொலை உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சுமார் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்துள்ளது. உலகமே பதறியது.
இந்திய பேரரசு பேச்சுக்குக்கூட கண்டிக்கவில்லை.
அமெரிக்கா அதிபரோ இப்பிரச்சனையின் ஆழத்தை வேதனையைக் கருதி இதற்கென தன் கவலைகளை உலகுக்கு தெரிவித்தார். நார்வே, கனடா,இங்கிலாந்து ஜப்பான் போன்ற நாடுகளின் வேண்டுகோளை நிராகரித்து இனப்படுகொலையை தொடர்ந்தது. இதற்குப் பெயர் தீவிர வாதத்திற்கு எதிரான போர் எனப் பிரகடனப்படுத்தியது.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் துணையோடு சின்னஞ்சிறு நாட்டில் மாபெரும் மனிதப் படுகொலை நிகழ்த்தியது. இதற்க்காக படைத்தளவாடங்கள்,பயிற்சி மற்றும் நிதியுதவியை தாராளமாக இந்நாடுகள் வழங்கியது. இச்செய்தியை பல முறை சிங்கள அமைச்சர்களே பெருமிதத்தோடு கூறியுள்ளார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் இந்தியத் துணையில்லாமல் இம்மாபெரும் வெற்றியை ஈட்டி இருக்க முடியாது என பக்சே கூறியதை மறக்க முடியாது.
விடுதலைப்புலிகளின் எல்லை குறுக்கப்பட்டு அவ்வமைப்பு சிதைக்கப்பட்டது. இலங்கை அறிவித்தது போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக. ஆனால் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்களைக்கூட அனுமதிக்க வில்லை. ஊடகவியலாளர்களை முற்றிலும் அப்பகுதிக்கு அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஐநா செயலர் பாகிமூன் போர்ப்பகுதிக்கு வந்தார். மன்னிக்கவும் இராஜபக்சே வரவழைத்தார். பார்வையிட்ட பின்பு கனரக ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை என அறிவித்தார். (அதற்குதானே வரவழைத்தார் இராஜபக்சே ). பாகிமூன் சீன பாசத்தைக் காட்டினார். ஆனால் உலகநாடுகளின் நெருக்குதலில் ஐநா மன்றம் இதை விவாதத்திற்கு எடுத்து இப்போது நடை பெற்று வருகிறது. கொலை செய்தவன் தடையங்களை மறைப்பான். இதற்காக சிரத்தை எடுத்து இந்தியா சீனா நாடுகள் இவ்விவாதத்தை நீர்த்துப் போகவைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்கா , இங்கிலாந்து போன்ற நாடுகள் இம்மனிதப்பேரழிவை உலக மன்றத்துக்கு கொண்டு சென்று இருப்பதால் கொலைக்குற்ற நாடுகள்! அச்சமடைத்துள்ளன. இதை தோற்க்கடிக்க இந்தியா சீனா பெறும் முயற்சிகள் செய்து வருகின்றன.
ஒரு நாட்டின் அரசு மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அவையில் போர்க்குற்ற விசாரணை மேற் கொள்ள வேண்டும்எனில் குறைந்தளவு 16 நாடுகள் அந்த குற்றச்சாட்டை ஆதரிக்கவேண்டும். இந்த அடிப்படையில் இராஜபக்க்ஷே அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கு டென்மார்க்கும், இங்கிலாந்தும் 17 நாடுகளின் ஆதரவை பெற்றுவிட்டன. மேற்கண்ட தொடர்நடவடிக்கை இனிமேல் எப்படி நடக்கப்போகிறது என பார்க்கலாம்.
No comments:
Post a Comment