Showing posts with label கிராமக்கல்வி | சமூகம் | சாதியம் | இடஒதுக்கீடு. Show all posts
Showing posts with label கிராமக்கல்வி | சமூகம் | சாதியம் | இடஒதுக்கீடு. Show all posts

கிராமப்புற மாணவர்களின் கல்வியை சீரழிக்க சதி...



நாடு விடுதலைப் பெற்று 55 ஆண்டுகள் நடந்து கொண்டு வருகிறது. அனைவருக்கும் உணவு, உறைவிடம், சுகாதாரம், வறுமை ஒழிப்பு என பல உறுதி சான்றுகளை அளிக்கிறது அரசியல் சட்டம். இப்போது கூட ஊரக மாணவர்களுக்கு இணைய தள வசதியுடன் கல்வி வழங்க போகிறார்களாம்.

அய்யா. கணினி கல்வி இணையம் எல்லாம் இருக்கட்டும்.. நல்ல வகுப்பறை, அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் முதலில் கிடைக்கட்டும்.

ஆனால் கல்வியை அனுபவிப்பது யார் ?

பார்ப்பனர்களே ! கேட்டால் சொல்வார்கள் தகுதி திறமைப் பற்றி வாய்கிழிய பேசுவார்கள். படிப்பது இங்கே பணத்துக்காக ஓடுவது வெளிநாடுகளுக்கு. தேசியம் இறையான்மை பற்றி போதிப்பதும் அவர்களே.

என்ன அந்தஸ்து, சொத்து, பணம் இருந்தாலும் இங்கு சாதிதான் அவர்களின் படிநிலையை தீர்மானிக்கிறது. படிநிலையில் மேல் நிலையில் உள்ள பார்ப்பனர்களே கல்வியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஐஐடி,எல்ஐசி, வங்கி துறைகளிலும் அவர்களே.

நீங்கள் சொல்வது கேட்கிறது இங்கும் வேலையில் இருக்கிறான் எம்மவன், லெட்ஜர் தூக்கிவைக்க, இரவு காவலாளியாக, கடை நிலை ஊழியனாக, பெருக்குவனாக.

இதைத்தான் அன்னல் அம்பேத்கர் சொல்லுவார் உடலுழைப்பை சாதியத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கும், மூளையுழைப்பை சாதியின் மேல் நிலையில் உள்ளவர்களுக்கும் இச்சமுகம் வழங்கி வருகிறது.

இதை மீறித்தான் உழைக்கும் மக்கள் கல்வியில் சாதனைகளை நிகழ்த்தி வருகிரார்கள். சமூக ரீதியாகாக மறுக்கப்பட்ட உரிமைகளை பெற இட ஒதுக்கீட்டின் மூலம் பெற்றுக் கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் தந்தைப்பெரியார் அவர்களின் சமூக இயக்க நிகழ்வுகளால் இங்கு பெரிய மாற்றமே நிகழ்ந்த்து.

இந் நிலையில் தான்...

10ம் வகுப்பில் மேற்கொள்ளப்படும் அரசுத்தேர்வு முறையை நீக்க அரசு பரிசீலனை செய்வதாக செய்திகள் வருகிறது.

கிராமப்பகுதியில் படிக்கும் மாணவனும் நகரப்பகுதியில் படிக்கும் மாணவனும் ஒரே மதிப்பெண் பெற்று இருந்தாலும் கற்கும் சூழல், கற்கும் விதம் பெரிய வித்தியாசமே உள்ளது.. எந்தவித தனிப்பயிற்சி ஏதும் இல்லாமல் ஊரகப்பகுதியில் 400 மதிப்பெண்கள் எடுக்க்கும் மாணவனுக்கும் நகரப்பகுதியில் 450 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவனுக்கு சம்மானவனே.

ஏனென்றால்

நகர மாணவன் படிக்கும் சூழல், தொழில்,படிப்பு ஊடகச்செய்திகளின் தாக்கம், கணினி, இணையம் போன்ற காரணிகள் அவனின் கல்வியை மேம்படுத்துகிறது.

ஆனால்.

ஊரக்க் கல்வி..

செருப்பேப் பார்க்காத கால்கள்..

மதிய உணவிற்கு பள்ளியை சார்ந்திருத்தல்..

படிக்காத பெற்றோர்கள்...

சந்தேகத்திற்கு யாரிடம் செல்வான் எம் மாணவன்/

5பாடங்களுக்கும் ஒரே ஆசிரியர் மிஞ்சிப்போனால் 3 ஆசிரியர்..

தனிப்பயிற்சி இல்லை

சிறப்புப்பாடம் இல்லை..

கணினிக் கல்வி இல்லை... இந் நிலையிலும் சாதனைகளின் சிகரத்தை எட்டியுள்ளோர் ஏராளம்.

அவர்களின் மேம்பாடுக்காக பாடுபடும் ஆசிரியர்களும் உண்டு.

இப்போதைய அறிவிப்பு, 10ம் வகுப்பு அரசுத்தேர்வு முறையை நீக்கப்போவதாக செய்திகள் வருகிறது.

இம்முறை செயல் படுத்தப்பட்டால்...

ஊரக்க்கல்வி கீழ் நிலைக்குச் செல்லும்..

அரசுத்தேர்வில் மதிப்பெண் ஈட்டவே அக்கறை எடுக்கும் ஆசிரியர்கள் முயர்ச்சி எடுப்பார்களா ?

7,8,9 வகுப்புகளில் போடப்படும் தரம், அனைவரும் தேர்ச்சி... அதுபோலவே

100 % விழுக்காடு தேர்ச்சி என்று பீற்றிக் கொள்ளலாம்.

கல்வித்தரம் என்ன வாகும்?

நகர்புற மாணவனுக்கு

மெட்ரிக்குலேசன், சிபிஎஸ்சி, ஆங்கில வழிக்கல்வி, கணினிப் பயிற்சி என்று அவனை தூக்கிவிட ஆயிரம் காரணிகள் இருக்கிறது..

எம் கிராம மாணவணுக்கு என்ன வைத்து இருக்கிறது ?

100 நாள் வேலைத்திட்டம்,

ஏரியைத்தூர் வார, செங்கல் சூளை, மாடு மேய்க்க, சித்தாள் வேலை என்று.

பார்ப்பனர்களுக்கு ஐடி, ஐஐடி,எல்ஐசி, வங்கி...

எங்களுக்கு..

அனைவரும் பாஸ்...

வேலை வாய்ப்பகத்தில் பதிவு.. புதுப்பித்தல்....

புதுப்பித்தல்... புதுப்பித்தல்... புதுப்பித்தல்... புதுப்பித்தல்...

இதைத்தான் செய்யப்போகிறது 10ம் வகுப்பு அரசுத்தேர்வு முறையை நீக்கப்போகும் செயல்பாடு..