

உயிர்க்கொல்லி வன்முறை (Bio terrorism) . பல ஆங்கில படங்களில் பார்த்திருக்கிறோம்.
ஈராக்கில் உயிர்க்கொல்லி ஆயுதங்களை தேடி சதாமை தூக்கிலிட்டு தன் அமைதி சமாதான முகத்தைக் காட்டினார் புஷ்.
ஆனால் இராஜ பக்ஷே ஒருப்படி மேலே சென்று விட்டார்.
யாரையும் உள்ளே விடுவதில்லை.
புலிகளின் அச்சுறுத்தலாம். அதுதான் புலிகளை ஒழித்துவிட்டோமே??!!.
அவர்கைகளில் கிலிஸ்டர் பாம் இல்லை.
பாஸ்பரஸ் குண்டுகள் இல்லை...
கனரக ஆயுதங்கள் இல்லை....
ஆனால் தினசரி கொலைகளை நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறார். வெளியே தெரிவதில்லை... எனென்றால் போரை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு இறப்புகள் எப்படி நிகழும்.. என்று உலகை கேட்பார். இந்தியாவும் பக்க வாத்தியம் இசைக்கும்.
இருவர் மட்டுமே தங்க வேண்டிய முகாமில் 15 முதல் 20 பேர்வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை...
ஒரு வேளை உணவுக்கே தட்டேந்தி பல மணிநேரக் வரிசையில் நிற்க வேண்டும்.
கழிப்பறையில் எப்போதும் 15 பேர் நின்று கொண்டு இருக்கும் நிலைமை...
உயிர்காக்கும் மருந்துகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை, சிகிச்சை இல்லை...
இன அழிப்பு செய்யப்பட்ட போரில் குடி பெயர்ந்து கொண்டே இருந்த மக்களில் பல பேருக்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டுக்கு ஆட்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள்...
ஊட்டச்சத்துக்கு ஆட்பட்டாலேயே அனைத்து சந்தர்ப்பவாத நோய்கள் தோன்றும்.
இந்நிலை சிங்கள அரசால் இப்போது செயற்கையாக தோற்றுவிக்கப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டே இராஜபக்சே நவீன சித்தரவதை முகாம்களாக மாற்றியுள்ளார்.
ஆம் தினமும் பிணங்கள் விழுந்து கொண்டே இருக்கிறது.. இவை கணக்கில் வராது. இது ஒருவ்கை டெரர்ரிசம். பையோ டெரர்ரிசம் நவீன வடிவம். கடந்த 15 நாட்களில் சின்னம்மை (Chicken pox) பரவி வருகிறது.
இது காற்றில் பரவும் நோய். இருவர் மட்டுமே தங்க வேண்டிய முகாமில் 15 முதல் 20 பேர்வரை தங்க நேர்ந்தால் கொள்ளை நோயாக வெளிப்படுகிறது.
ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்நோய்க்கு குறுகிய காலத்திலேயே ஆட்பட்டு விடுகின்றனர்.
சுமார் 15 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கசிகிறது.
பிறகு...
நீரினால் பரவும் நோய்களான தீவிர குடல் அழற்சி ,வயிற்றுப்போக்கு மற்றும் காலரா தோன்றினால் மனித இழப்பு அதிக மாகும். ஆனால் அச்சூழ்நிலைகள் நிறையவே அங்கு உண்டாக்கப்பட்டு வருகிறது.
டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற கொசுக்களினால் பரவும் நோய்களும் வரவாய்ப்பிருக்கிறது..
இந் நோய்கள் செயற்கையாக இராஜபக்சேவினால் தோற்றுவிக்கப்படுகிறது.
இறப்பை நோயின் மீது போடவே இச்சதியாகும்.
ஐநா கண்டு கொள்ளாது.
பாகிமூன் சீன பாசத்தில் உள்ளார்.
பக்சேவோ இந்தியாவின் நேசத்தில் உள்ளார்.
உலக நாடுகள் இத்திரை மறைவு மனிதப்பேரழிவை தடுக்க வேண்டும்.
உலக சமூதாயத்தின் பார்வையில் இவ்வன்செயல் மறைக்கப்படுகிறது என்பது உண்மையே.