எப்படி முடிகிறது?- கவிதை


முகம் தெரியாத

பையன் பிச்சை எடுப்பதை

பார்த்து

மகனை பொருத்தி

வேதனைப்படும் மனசு.






ஈ மொய்த்து

அனாதையாய் செத்துக் கிடப்பவனை

எனக்கு அறிமுகமானவனாக இருக்குமோ

என்று எட்டிப்பார்த்து

வேதனைப் படும் மனசு.




காய்ந்த தலையோடு

ஒரு முழம் பூவை விற்க

கெஞ்சும் அவளை

என் மகளோடு பொருத்தி

வேதனைப்படும் மனசு.

தூங்காத இரவுகளில்

தலையனை ஈரமாக்கும்

பொழுதுகள்.




எவரையோ காப்பாற்ற

எவரோ சொன்ன தகவலுக்காக

எச்சரிக்கையொலியோடு விரையும் அவசர ஊர்தியை பார்த்து

என் மனது பதட்டப்படுகிறது.




சம்மந்தமில்லாத நிகழ்வுகளை

எல்லாம் சம்பந்தப்படுத்தி

என்னை பாதிக்கும் எல்லா நிகழ்வுகளும்

நடக்காதது போல

பக்கத்து பயணியால்

எப்படி பயணிக்க முடிகிறது.

No comments:

Post a Comment