நளினிக்கு இராஜீவ் காந்தி கொலைவழக்கில் 19 ஆண்டுகள் தண்டனைப்பெற்று ஆகிவிட்டது .
வழக்கு முடிந்து மாவட்ட ஆட்சியர் வேலூர் அவர்களின் பரிந்துரைக்காக உள்ளது.
இன்று தேசிய அத்தாரிட்டி பயங்கரவாத எதிப்பு புகழ் ஈ.வி. எஸ் இளங்கோவன் நளினியை விடக்கூடாது என்று கூறியுள்ளார்.
நல்லது.
அன்னை! இந்திராவை கொன்ற சீக்கியர்களின் நிலை என்னத் தெரியுமா ?
சீக்கிய இன தீபங்கள்.
இன்றும் பொற்கோவிலுக்குள் அவர்களுக்கு என்று தனி மரியாதை.
அம்மக்களால் போற்றிப் புகழப்படுகிறார்கள்.
கொலைகுற்றம் சாட்டப்பட்ட துனைவியாருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதிவியை தந்து மகிழ்ந்தனர்.
சீக்கியர்களின் அதி உயர் பீடமான 'அகால் தக்கட்'(Akal Takhat) அவர்களுக்கு 2008 ஆம் ஆண்டு சனவரி 6 அன்று பட்டம் சூட்டி கௌரவித்துள்ளார்கள்..
இன்றய நிலை என்ன இவ்வினத்தின் பிரதிநிதிதான் இந்தியாவின் தலைமை அமைச்சர்.
நாம் நளினியை மன்னித்து விடக் கோரவில்லை.
அவர் தண்டனை பெற்றுவிட்டார்.
அதுவும் 19 ஆண்டுகால சிறைவாழ்க்கை.
இறுதிகாலத்தை குழந்தையுடன் வாழ விரும்புவதாக கூறியிருக்கிரார்.
உடனே கொதித்தெழுகிறார் இளங்கோவன்.
பயங்கரவாத்ததை எதிர்ப்பேன் என்று.
அன்னை இந்திராவை கொன்ற சீக்கியர்களுக்கு கிடைக்கும் தனிமரியாதையை விமர்சிப்பாரா?
அதை மன்மோகனிடம் தெரிவிப்பாரா?
எங்கள் வாய்ப்பேச்சுவீரன் இளங்கோவன்...

No comments:
Post a Comment