
இராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் கேள்விக்குறியாகிவிட்டது. இந்திய எல்லையைத் தாண்டி தமிழர்க மீனவர்களை தாக்கி சிறைப்பிடிப்பது எளிதான செயல் இல்லை. மீனவர்கள் இப்போதல்லாம் தொலைதொடர்பு இணைப்பு உள்ள நவீன கருவி மூலமே கடலுக்கு செல்கிறார்கள்.
அதிலும் தாக்குதல்கள் அதிகமாக உள்ள இக்காலங்களில் எல்லையை எப்படித் தாண்டுவார்கள்?.
இதிலும் ஈழதமிழினத்தின் மீது சொலாவன்கொடுமை செய்து உறவு கொண்டாடிவரும் சிங்கள அரசுக்கு இராணுவ தளவாடம் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி வரும் இந்தியா இராணுவத்தின் பார்வையில் படாமல் செல்லவே முடியாது. வாரத்திற்கு மூன்று நான்கு தாக்குதல்களை இலக்காக வைத்து செய்கிறார்கள். இதுவரை சுமார் 500 மீனவர்களை சுட்டுக் கொன்று இருக்கிறது சிங்கள அரசு.
வேடிக்கை என்னவென்றால் இதுவரை ஒரு சிங்கள மீனவனும் இந்திய இராணுவத்திடம் குண்டடிப்பட்டு இறக்கவில்லை ( நமது விருப்பமும் அது இல்லை ). பிடிப்பட்டவன் சிரித்துக் கொண்டே போஸ் கொடுப்பது அனைத்து வசதிகளுடன் மீண்டும் அவர்களிடம் சென்று பத்திரமாக அளிக்க இவர்கள் தயக்குவதே இல்லை. இவற்களுடைய இறையான்மையும் இதுவே?
இதுவரை சுமார் 500 மீனவர்களை சுட்டுக் கொன்ற சிங்கள அரசின் மீது
ஒரு கடுங்கண்டனத்தையும் பதிவு செய்யமாட்டார் சார்க் அமைப்பின் போலிஸ்கார்ரான இந்தியா.
இந்திய எல்லையில் நுழைந்து சுடுவது, தாக்குவது போன்ற அத்துமீறல்கள் போன்றவை இந்திய அரசின் ஆசியோடு இன்றி நடை பெறவே முடியாது. அதிநவீன கருவிகள் கொண்ட இந்திய இராணுவம் கண்டும் காணாமல் இருப்பதில் வியப்பேதுமில்லை.
இந்திய அரசின் சூதில் தமீழீழக் கனவு சிதைக்கப்பட்டது.
ஈழத்தில் நடந்த இன அழிப்பு நடவடிக்கை உச்சதில் இருந்தபோது தமிழகத்தில் தேர்தல் ஜனநாயகத்தை பொறுப்பாக நிறவேற்றியதால் 3 இலட்சம் தமிழர்களை திறந்த சிறைக்கொட்டடியில் வைத்திருக்கிறார்கள்.
அங்கே இன அழிப்பு.
இங்கே இன அழிப்பு செய்திகளைக்கேடுக் கொண்டே ஓட்டுப்போட்டதின் விளைவு
இராஜபக்சேவை அத்து மீறவைக்கிறது.
ஆம் தமிழக மீனவர்களின் மீது விழும் ஒவ்வொரு அடியும் இந்திய அரசின் ஆசிர்வாதத்தோடே நடக்கிறது.
புலிகள் ஆதிக்கம் கோலோச்சியபோது கடல் பரப்பில் நுழைய பயந்த சிங்கள அரசு இப்போது இந்திய எல்லையில் புகுந்து மீனவர்களை சுட்டுக் கொல்வது வாடிக்கை செய்தியாகி விட்டது.
தமிழக அரசோ மத்திய அரசுக்கு நெருக்குதல் கொடுக்க முடியாத வக்கற்ற அரசாக இருக்கிறது.
வழக்கம் போல.
தொலைப்பேசி... அறிக்கைகள்... தமிழக மீனவர்களை காப்பாற்ற போவதில்லை.
கலைஞர் அரசு ஆட்சியை காப்பாற்ற
ஆட்சியை நிலை நிறுத்த
ஈழமக்களை பலிக்கொடுத்தது.
இப்போது தமிழக மீனவர்களை பலிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
சுடுவது சிங்களவன்...
சுடச்சொல்வது இந்திய அரசு
இப்படித்தான் என்னத்தோன்றுகிறது.
No comments:
Post a Comment