
ஈழப்படுகொலை கொஞ்சம் கொஞ்சமாக சந்தி சிரிக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள காணொலிக்காட்சி உலகத்தையே பதறவைக்கிறது. நடுநிலையாளர்களின் சுட்டுவிரல் காங்கிரசைதான் காட்டுகிறார்கள். இந்தியாவின் இலங்கை இனப்படுகொலை ஆதரவு நடவடிக்கை பெரிய கலங்கத்தை சர்வதேச சமூக அளவில் தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறது. முடிந்த நாடாளுமன்றத்தேர்தலில் எதிர்ப்பார்த்த வெற்றியை தமிழகத்தில் ஈட்டமுடியவில்லை. ஈழத்தில் படு கொலை நடந்து கொண்டிருந்த காலத்தில் அந்நிகழ்வு பதில் சொல்லக்கூடிய அளவுக்கு பெரிய நிகழ்வு இல்லை என்று கூறியவர் இராகுல் காந்தியாவர். தன் தந்தையின் இழப்பை இப்படுகொலைகளில் ஈடு செய்தாகிவிட்டது என்றாறோ!. காங்கிரசை தூக்கி நிறுத்த வேண்டும் அதுவும் தமிழகத்தில். அதுவும் சினிமா கலாச்சாரத்தில் முழ்கித் திலைத்து அரசியல் கண்ட பூமி இது. அரிதாரம் பூசிய உருவத்தை காண்பித்தால் ஓட்டு கிடைத்துவிடும் என்று விஜயின் ஸ்டார் வேல்யூவை பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் முயல்கிறது.
கைச்சின்னத்தில் படிந்துள்ள ஈழத்தமிழரின் குருதியை விஜயின் வருகையால் மறைத்து விடாலாம் என்று இராகுல் நினைத்து இருக்கலாம். ஆனால் தமிழக மக்கள் இராகுலின் அரசியல் கணக்கை சரியென்று மெய்ப்பிப்பார்கள் என சொல்ல முடியாது.
காங்கிரசின் கபட நாடகத்தில் விஜய் அரசியல் பாத்திரம் வகித்தால் பூச்சியம்தான் கிடைக்கும். அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்ட விஜய்க்கு சினிமாவில் வேண்டுமானால் வரவேற்பு கிடைக்கலாம். எம்ஜீஆர் வேல்யூ எல்லாம் அந்தகாலம். மெல்ல மெல்ல தமிழக மக்கள் அதை உடைத்துக் கொண்டு வருகிறார்கள். நான் சொல்வதை நாளைக்கு நானே கேட்கமாட்டேன் என்று விஜய் வேண்டுமானால் சொல்ல்லாம். தமிழக மக்கள் அவரின் பேச்சை கேட்கப் போவதில்லை. இராகுலின் பார்முலா கூட்டலா கழித்தலா.
No comments:
Post a Comment