மலத்தை பூசிக்கொண்டு....

கொடியை எரித்தாயா !

ஆம்.

எவ்வளவு பெரிய பாவம்.

தேச துரோகச் செயல்!

பினை வேண்டுமா?

எங்கள் வீட்டு கக்கூசை ஒரு வாரத்திற்கு கழுவி

இந்தியன் என்று நிருபி..

வருண் காந்தியா ?

அப்படி என்ன பேசினார் ?

விடுவி. உடனே விடுவி ..

போபர்ஸ் ஊழலா

அப்படியொன்றும் நிகழவே இல்லை.

ஆதாரமில்லை.

வழக்கு தள்ளுபடி செய்...

மசூதி இடிக்கப்பட்டதா?!

அவர் எவ்வளவு பெரிய மனிதர்

மேன்மைமிக்கவர்..

உடனே விடுவி..

நீதியரசர் தலையை பிளந்ததா?

போலிஸ்

போலிசின் அடி தெரியாமல் விழுந்திருக்கும்.

  • .

டான்சி நிலத்தை

அரசு நிலத்தை வாங்கினாரா?

அவரின் மனதுக்கே தெரியும் ....

விட்டு விடு..

ஈழத்தமிழர் படுகொலை எதிர்த்து

கொடியை எரித்தாரா?

எவ்வளவு பெரிய தேச துரோகம்..

நீதிமன்ற கக்கூசின்

மலத்தை பூசிக்கொண்டு

கொடியை ஏற்று...

பரிகாரம் தேடு...

No comments:

Post a Comment