அத்துவானிக்கு தண்டனை அளிக்க வழிவகுக்குமா லிபிரான் கமிசன்?





1992ம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் முதல்வர் கல்யாண் சிங் தலைமையில் பாஜக ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். லிபரான் தலைமையில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் குழு அமைத்தார்.

இடித்தவர்கள் யாரென்று உலகுக்கேத்தெரியும்?

இந்துவெறியர்கள்?

இந்துமதவாதத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் ?

இந்தியாவை இந்து நாடாக வேண்டும் என்று அறிவிக்கவேண்டும் என்று முழக்கமிட்டவர்கள்?

பாஜக ,ஆர் எஸ் எஸ், விஎச்பி போன்ற அமைப்புகள் முன்னின்று நடத்தியது.

அத்துவானி, முரளிமனோகர்ஜோசி, செல்வி உமாபாரதி போன்றோர் இந்நிகழ்வில் நேரடியாக பங்கேற்றனர்.

அப்போதைய பாஜக முதல்வர் கல்யான்சிங் ஆசியோடு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்திய தலைமை அமைச்சர் நரசிம்ம ராவ் அனுப்பிய இராணுவம் மசூதி இடிக்கப்பட்டதை உறுதி செய்த பின்னரே அயோத்திக்குள் நுழைந்தத்து .

டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் வெடித்த மதக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர். இதையடுத்து 10 நாட்களில் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே நீண்ட காலமாக விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் என்ற பெயர் இந்த கமிட்டிக்குக் கிடைத்துள்ளது.

சுமார் 400 முறை இந்தக் குழு கூடி நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வாங்கியது. அதில் பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் முதல்வர் கல்யாண் சி்ங், வினய் கத்யார், உமா பாரதி, விஎச்பி தலைவர் அசோக் சி்ங்கால், ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சன் ஆகியோரும் அடக்கம்.

கமிஷன் கடைசி சாட்சியை 2005ம் ஆண்டு விசாரித்து முடித்தது.

பாபர் மசூதியை இடிக்க தூண்டிய காரணிகள் எவை என்பது குறித்து விசாரிக்க இந்த கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டது.

தொடக்கத்தி்ல் 1993ம் ஆண்டு மார்ச் 16ம் தேதியன்று இந்த கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து நீட்டிப்பு கோரி வந்தது. இந்தக் குழு கடந்த 17 ஆண்டுகளாக விசாரணை நடத்தியது. 48 முறை இந்த கமிட்டியின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டது.

கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. நாட்டிலேயே அதிக அளவு செலவு பிடித்த கமிஷனும் இதுதான். இதுவரை ரூ. 8 கோடி அளவுக்கு இந்த கமிஷனுக்காக அரசு செலவழித்துள்ளது.

பாஜக இடித்தாலும் அப்போதைய காங்கிரசின் ஒத்துழைபோடுதான் மசூதி இடிக்கப்பட்டது. நரசிம்மராவ் தன்னை ஆர் எஸ் எஸ்சின் பழைய செயல் வீர்ர் என்று குறிப்பிட்டதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் மதச்சார்பின்மை பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதே அதனுடனேயே தரைமட்டமாக்கப்பட்டது.

இந்து மத வெறியர்களுக்கு இது நல்ல துவக்கமாக போனது .

குஜராத்தில் இஸ்லாமியர்களைக் கொன்று இந்துத்துவ முதல்வர் எனப்பேர் பெற்றார் நரேந்திர மோடி.

தேர்தல் வரும் போதல்லாம் இராமர் இரதம் ஓட்டுவார்.

அயோத்தியில் கோவில் கட்ட செங்கல் தூக்குவார்கள். இங்குக் கூட முன்னால் முதல்வர் கூட தன் பங்குக்கு சுமார் 2000 பேர்களை அனுப்பியதாக செய்திகளும் உண்டு.

சரி.

17 ஆண்டுகால விசாரணை ?!

சுமார் 8 கோடி ரூபாய் விசாரனை செலவு ?

இவ்வறிக்கை...

இன்றும் அந் நிகழ்வை ஆதரித்து அரசியல் நடத்தும் அத்துவானியின் காலில் உள்ள மயிரையாவது புடுங்குமா ?

அத்துவானிக்கு தண்டனை அளிக்க வழிவகுக்குமா?

4 comments:

கலையரசன் said...

அருமையான எழுத்து நடை!
தொடருங்கள்..

Anonymous said...

நன்றி. கலை.. உங்கள் விமர்சனங்கள் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தும்.

ராஜவம்சம் said...

உங்கலை போன்ர நடு நிலையாலர்கல்ள் இருப்பதால் தான் இந்தியா இந்தியாவாக
இருகிரது

அஞ்சான் said...

நன்றி , ராஜா

Post a Comment