கொடுமை செய்யும் கணவன்மார்கள்- திகிலூட்டும் அறிக்கை




பெண்களுக்கு வீடுகளில் ஏற்படும் கொடுமைகள், வன்செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெண்களை தெய்வங்களாக, தாயாக பாவிக்கச் சொல்லும் இச்சமுகத்தில் தான் பெண்களின் மீதான வன் செயல்கள் அலுவலகத்தில் மட்டுமல்ல வீடுகளிலும் தொடருகிறது.

பாலியல் வன்செயல், தீயிட்டு எறிப்பு, விவாகரத்து,கேலி,கிண்டல்,ஏளனம் என பல வடிவங்களில் பென்கள் மீது வெளிப்படுத்தப்படுகிறது.

2006 அக்டோபர் முதல் சூலை 2008க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் தமிழகத்தில் 1180 வழக்குகள் பெண்கள் மீதான வன்செயல்கள் குறித்த குற்றங்கள் பதிவாகியுள்ளது.

இக்கொடுஞ்செயல்கள் பெரும்பாலும் கணவன் மற்றும் நெறுங்கிய உறவு முறைகளில் மட்டுமே நடக்கிறது என்பது கசப்பான உண்மை.

தேசிய பெண்கள் வாரியம் கொடுத்த அறிக்கையில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் இந்தியாவில் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

கணவன் மற்றும் நெறுங்கிய உறவு முறைகளில் ஏற்படும் தாக்குதல்களில் தமிழகத்தில் மட்டும்1991ல் 222 குற்றவழக்குகள், 2001ல் 815 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

வரதட்சணை கொடுமையால் ஏற்பட்ட இறப்புகள் 1991ல் 91ம், 2001ல் 191 இறப்புகளாக உயர்ந்துள்ளது. இச்சமுகம் தவறான போக்கில் சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது.

மண்ணாசை-பொன்னாசை-பெண்ணாசை என்று துறக்க வேண்டிய பட்டியலில் மண் , பெண் போன்ற பொருட்களோடு பெண்ணையும் ஒரு பொருளாக சேர்த்த்து மதம்..இச்சமுகம். பெண்ணின் உடம்பு தீட்டுப்பட்டது- புனித மற்றது-பாவத்தின் சின்னம் என்று இந்துமதம்,கிருத்துவம்,இஸ்லால்,பௌத்தம் என எல்லா மதங்களும் போதிக்கின்றன.

சொத்தைக் காக்க வாரிசு பெற்றுப்போட, வெளியே கட்டற்ற காளையாக அலையும் ஆணை கட்டிப்போட ,பொருத்திக் கொள்ள ஒரு யோனியாகவும், ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டு உடம்பு கெடுத்துக் கொள்ளும் மகனுக்கு சுவையாக சமைக்க, பெருக்க துணி துவைக்க என கூலி வாங்காத “மகாலச்சுமியை “ தேடி பிடித்து கட்டுகிறார்கள். முக்கியம் என்னவென்றால் கூலி வாங்காத “மகாலச்சுமிபணம்,சவரன் நகைகள்,ஸ்கூட்டர், வீடூ என இத்தியாதி கொடுத்துதான் மண மகளாக வருவாள். சித்தாள் வேலைக்குச் செல்லும் பெண்ணாகட்டும், ஐடி தொழிலில் பணிபுரியும் பெண்களாகட்டும் இவ் வன்செயல்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. விழும் உதையில் வசை மொழியில் வேண்டுமானால் ஏற்றம் இறக்கங்கள் இருக்கலாம்.

கற்பு என்ற புனித கருத்தியலை பெண்கள் மீது தினிக்கிறது.. ஆம்பளை ஆயிரம் சொல்வான் செய்வான் என்று ஒரு தாயையே மகனுக்காக இச் சமுகம் பேசவைக்கிறது.. வேலைக்கு போகும் பெண்கள் நடத்தைக்கெட்டவர்கள் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஆனந்த விகடன் நாளிதழில் சொன்னதை கவனிக்க வேண்டும்.

போதைத்தரும் ‘வோத்காபோல் பெண் ஏன் பார்க்கப்படுகிறாள்?,சிறு வயது பெண்கூட பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது ஏன்?,பத்தினி தெய்வமாக இருக்க வேண்டும் ஆம்பளை அப்படி இப்படி என்று இருந்தாலும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கொள்ள வேண்டும் எதனால்?, நல்லப்படிப்பு உயர் தொழில் செய்தாலும் வழக்கமான குடுப்ப பொறுப்புகளை கடைமையாக ஏற்றுக் கொள்ள அவளின் மனதில் தினிப்பது எது?, பெண் மட்டும் குடும்ப பலிப்பீட்த்தில் தன்னை மகிழ்வுடன் அர்ப்பணித்துக் கொண்டே இருக்கிறாள் ?ஏன்?..........

என்ற பல கேள்விகளுக்கு குடும்பம் என்ற அமைப்பே திரும்பத்திரும்ப வருகிறது.

பணம் பட்டுவாடா, இலாபம்,சொத்து, வாரிசு என பொருளியல் சார்ந்த நிகழ்வுகளோடே இக்கேள்விகளின் விடைகளைத் தேட வேண்டும்... காவல் நிலையம் நீதி மன்றம் போன்று வன்முறைஆயுதங்களாக செயல்படுவது போல, இங்கும் குடும்பம் என்ற கோவிலும் வன்முறை ஒடுக்கும் கொலை களமாக வதை முகாமாக காணப்படுகிறது. பெண்களில் தாயாக,சகோதரியாக,மனைவியாக, தோழியாக பல முகம் காட்டும் பெண்ணினத்தின் பெருமூச்சில் குடும்பத்தின் வன்தாக்குதலின் வெளிப்பட்டைக் காணலாம்.

“உணர்ச்சிகரமானவையாகவும் சோறு பொங்கிச் சாப்பிட்டு டி.வி பார்த்துத் தூங்கும் இடங்களாக மட்டுமே இருக்கும் நம் குடும்பங்கள் இனி அறிவு அளரும் இடங்களாகவும் மாற வேண்டும். புத்தகங்களும், வாசிப்பும் குடும்ப வாழ்வின் அன்றாடமாக வேண்டும்.சமூகம் தான் குடும்பத்தின் குணத்தை கடைமைகளை தீர்மானிக்கிறது. எனவே,நமது குடும்பங்கள் சமூக மாற்றத்துக்கான போராளிகளைத் தயாரிக்கும் பயிற்சிப்பட்டறைகளாக மாற வேண்டும். அப்படியான குடும்பத்தை உருவாக்குவதிலும் பெண்களே முன்னிற்க வேண்டும். ஆண்கள் மனமாற்றம் பெற பெண்களின் முயற்சியும் போராட்டமும் அடிப்படையாக அமைய வேண்டும் “(நமக்கான குடும்பம். நூலில் ச.த்மிழ்ச்செல்வன்)

No comments:

Post a Comment